Baakiyalakshmi: மாலினியிடம் நெருங்கும் செழியன்.. அப்ப அது உண்மை தானா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.

தற்போது ஜெனியின் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருபுறம் அவரை பிரியும் வருத்தத்தில் செழியன் காணப்படுகிறார்.

ஆனால் அதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல் ஜெனி இருப்பதாக செழியன் நினைக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking 24-08-23

மாலினியிடம் நெருக்கம் காட்டும் செழியன்: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக இருந்து வந்தது பாக்கியலட்சுமி. கடந்த இரு வாரங்களாக சிறகடிக்க ஆசை தொடரிடம் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கடந்த இரு வாரங்களாக கோபியின் காட்சிகள் அதிகமாக இல்லாததும், கல்லூரியில் பாக்கியா சேர்வதையொட்டிய காட்சிகளே அதிகமாக இருந்ததும் இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொடர் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

கல்லூரி, ஆங்கில வகுப்பு, சமையல் கான்டிராக்ட் என மிகவும் பிசியாகியுள்ளார் பாக்கியா. இதனால் ஏற்பட்ட குளறுபடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேன்டினில் பிரச்சினை ஏற்பட, கான்டிராக்ட் கைநழுவும் சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராதிகா கம்பெனி நிறுவனரிடம் கான்டிராக்டை ரத்து செய்ய அறிவுறுத்துகிறார். ஆனால் பழனிச்சாமியின் அறிவுரைப்படி, நிறுவனர் கோடீஸ்வரனை சந்தித்து நிலைமையை எடுத்து சொல்லும் பாக்கியா, இந்த விவகாரத்திலிருந்து மீண்டும் கேன்டினை தொடர்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking 24-08-23

இதையடுத்து தன்னை இதுபோல தொடர்ந்து என்கேஜ் செய்ததால்தான் கேன்டினில் பிரச்சினை ஏற்பட்டதை உணரும் பாக்கியா, இந்த விவகாரத்தில் தெளிவான ஒரு முடிவை எடுக்கிறார். ஆங்கில வகுப்பிலிருந்து நிற்கும் முடிவுதான் அது. இந்த முடிவை அவருக்கு அதிகமான வலியை கொடுத்தாலும் பழனிச்சாமி மற்றும் லோபிகா இருவரும் வகுப்பில் நடக்கும் பாடங்களை அவரிடம் ஷேர் செய்கின்றனர். இதனால் பாக்கியலட்சுமிக்கு நிம்மதி கிடைக்கிறது.

இந்நிலையில் பாக்கியாவின் மூத்த மருமகள் ஜெனிக்கு வளைகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான பலகாரங்களை செய்யும் பாக்கியா, அதை அனைவரும் டேஸ்ட் செய்யவும் கொடுக்கிறார் அனைவரின் பாராட்டுக்களுக்கும் உள்ளாகிறார். இதனிடையே, வளைகாப்பு முடிந்தால் ஜெனி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால் செழியன் மிகுந்த வருத்தமடைகிறார். தன்னுடைய மனைவியை இங்கேயே தங்குமாறு கேட்கிறார். ஆனால் தன்னுடைய அம்மாவின் விருப்பத்தை பார்க்கும் ஜெனி, இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இதனிடையே, மறுநாள் வளைகாப்பு நடப்பதால், தன்னிடம் உட்கார்ந்து பேசுமாறு செழியன் ஜெனியிடம் ஆசையுடன் கேட்கிறார். ஆனால் செழியனிடம் பேசினால், தான் மட்டுமே பேச வேண்டும் என்றும் பதிலுக்கு செழியன் பேசமாட்டார், சுத்த போர் என்றும் ஜெனி கூறுகிறார். இதனால் தன்மீது ஜெனிக்கு காதல் இல்லை என்று நினைக்கிறார் செழியன். இந்நிலையில், அவருக்கு கால் செய்யும் மாலினி, உடனடியாக அவரை சந்திக்க வேண்டும் என்றும் அவரை மிஸ் செய்வதாகவும் கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking 24-08-23

முதலில் அதற்கு மறுக்கும் செழியன், பின்பு புறப்பட்டு செல்கிறார். அங்கு செழியனிடம் ரொமான்டிக்காக பேசுகிறார் மாலினி. தன்னுடைய வெற்றித் தோல்விகளை பகிர்ந்துக் கொள்ள தனக்கு யாரும் இல்லை என்று கூறுகிறார். தோல்வியில் முடிந்த தன்னுடைய காதல் கதையையும் பகிர்கிறார். இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் செழியன் அவருக்கு தான் இருப்பதாக கூறுகிறார். இதனால் நெகிழ்ச்சி அடையும் மாலினி, செழியனின் கைகளை பிடித்து நன்றி கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

ஜெனி வளைகாப்பு முடிந்து அவரது அம்மா வீட்டிற்கு செல்லவுள்ள நிலையில், செழியன் -மாலினியின் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரிலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது பாக்கியலட்சுமி தொடர். ஸ்ரீமோயி தொடரில் செழியன் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டுவதாகவே அமைந்துள்ள நிலையில், பாக்கியலட்சுமி தொடரிலும் அதற்கான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X