Baakiyalakshmi: Count Your days.. அலுவலகத்தில் மீண்டும் வம்பிழுக்கும் ராதிகா.. குழப்பத்தில் பாக்கியா
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
தான் சவால் விட்டபடி, ஒரு மாதத்தில் வீட்டிற்கான பணத்தை செட்டில் செய்யும் பாக்கியா பெயரில் வீடு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீட்டின் முன்பு பாக்கியா இல்லம் என பெயர்ப்பலகையையும் எழில் பிக்ஸ் செய்கிறார். அடுத்தடுத்த இந்த செயல்பாடுகள் கோபியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அலுவலகத்தில் பாக்கியாவிற்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் ராதிகா: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் தொடர்ந்து பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ரசிகர்களின் பேவரிட் தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களுடன் காட்சியமைப்புகளை இயக்குநர் கொடுத்து வருகிறார். தன்னுடைய மாமியாரை அவமானப்படுத்திய ராதிகாவிற்கு பதிலடி கொடுக்கும்வகையில், கோபியிடம் சவால் விடுகிறார் பாக்கியலட்சுமி.
வீட்டை மீட்பதற்காக மீதம் கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுப்பதாக தான் விட்ட சவாலை மிகுந்த பிரயத்தனத்துடன் நிறைவேற்றுகிறார் பாக்கியா. தொடர்ந்து பிரம்மாண்டமான சமையல் கான்டிராக்டை எடுக்கும் பாக்கியா, தன்னுடைய மகன்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பணத்தை கோபிக்கு கொடுத்து செட்டில் செய்கிறார். பாக்கியாவால் அந்த பணத்தை குறிப்பிட்ட காலகட்டத்தில் கொடுக்க முடியாது என்று அலட்சியமாக இருக்கும் கோபிக்கு இந்த செயல் அதிர்ச்சியை கொடுக்கிறது.

தொடர்ந்து பாக்கியலட்சுமி பெயரில் வீட்டை கோபி ரிஜிஸ்டர் செய்துக் கொடுக்கிறார். இதில் ஏதாவது குளறுபடி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தலால், சொன்னபடி ரிஜிஸ்ட்ரேஷனை செய்துக் கொடுக்கிறார். இதையடுத்து அந்த வீடு பாக்கியலட்சுமி இல்லமாக மாறுகிறார். வீட்டிற்கு முன்பு எழில் இந்த பெயர்ப்பலகையை மாட்டுகிறார். இதைப் பார்க்கும் கோபியின் அதிர்ச்சி மேலும் அதிகமாகிறது.
தொடர்ந்து பாக்கியா தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து தன்னை பிரித்ததை போலவே, தானும் பாக்கியாவை தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இதனிடையே அலுவலகத்தில் ராதிகாவின் அட்டூழியம் மீண்டும் துவங்குகிறது. கேன்டீனில் ராதிகாவிற்கு தோசையை மாற்றிப் பரிமாறுகிறார் செல்வி. இந்த சிறிய விஷயத்திற்காக கோபமடையும் ராதிகா, செல்வியையும் தொடர்ந்து பாக்கியாவையும் திட்டித் தீர்க்கிறார்.

வீட்டிலிருந்து தன்னை வௌயே அனுப்பிய ஆணவத்தில் பாக்கியா, கேன்டீனிலும் அலட்சியமாக நடந்துக் கொள்வதாக கோபத்துடன் பேசுகிறார். மேலும் தொடர்ந்து கேன்டீன் அவரிடம் இருக்கும் என்று மனக்கோட்டை கட்ட வேண்டாம் என்றும், விரைவில் கேன்டீன் கான்டிராக்டை அவரிடம் இருந்து பறிப்பேன் என்றும் சவால் விடுகிறார். கவுண்ட் யுவர் டேஸ் என்றும் கூறுகிறார். இதனால் பாக்கியா, குழப்பத்தில் ஆழ்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











