Baakiyalakshmi serial: ஜெனிக்கு வீடியோ அனுப்பிய மாலினி.. அதிர்ச்சியில் செழியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

தற்போது தன்னுடைய மகன்களின் வாழ்க்கை மற்றும் தன்னுடைய வாழ்க்கை சிக்கலாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து பாக்கியா என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes more fans and thrilling

இதனிடையே குழந்தையை வைத்து கண்ணாமூச்சு ஆடிய மாலினியை தன்னுடைய வீட்டிலிருந்து ஆத்திரத்துடன் பாக்கியா வெளியேற்றிய சம்பவமும் நடந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் சிக்கலில் உள்ள தன்னுடைய வாழ்க்கை மற்றும் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை சீராக்க என்ன மாதிரியான நடவடிக்கையில் பாக்கியா ஈடுபடுவார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஈஸ்வரி.

சிக்கலில் பாக்கியா: இதற்கு பாக்கியா எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறுவதாக கூற, அவருடைய மாமனார் மற்றும் மகன்கள் சமாதானப்படுத்தி பாக்கியாவை வீட்டிலேயே இருக்க செய்துள்ளனர். இதனிடையே, கோபி எது குறித்தும் கவலை கொள்ளாமல் தன்னுடைய அம்மா கூப்பிட்டதும் சென்றுவிட்டதாக கூறி ராதிகாவும் கோபியிடம் தொலைபேசி மூலம் தொடர்ந்து சண்டை பிடித்து வருகிறார். இதைப் பார்த்து, ஈஸ்வரியும் அவரிடம் கோபத்துடன் சண்டை பிடிக்கிறார்.

மாலினியிடம் சிக்கிய செழியன்: இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வரும் மாலினி, செழியனின் குழந்தையை வைத்து கண்ணாமூச்சு விளையாட்டு ஆடுவதாக கூறி, அனைவரையும் பரிதவிக்க வைக்கிறார். இதையடுத்து ஆத்திரத்துடன் மாலினியை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் பாக்கியா. இதனால் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் மாலினி, செழியனிடம் அதை வெளிக்காட்டுகிறார். தான் எந்த காரணத்திற்காகவும் செழியனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

சந்தோஷத்திற்கு உலை: இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் செழியன். மாலினி அடிக்கடி கால் செய்து மிரட்டுவதில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார். தான் செய்த தவறு தற்போது தன்னுடைய சந்தோஷத்திற்கே உலை வைத்ததை எண்ணி மருகுகிறார். இதனிடையே தான் கூப்பிட்டும் செழியன் வீட்டிற்கு வராததால், மறுநாள் காலையிலேயே ஜெனிக்கு வீடியோ அனுப்பி வைத்துள்ளதாக கூறி செழியனை தவிக்க வைக்கிறார் மாலினி.

மிரட்டும் மாலினி: இதையடுத்து ஓடிப் போய் ஜெனியின் மொபைலில் மாலினி அனுப்பி வைத்த வீடியோவை பார்க்கிறார் செழியன். ஆனால் ஜெனிக்கு ரைம்ஸ் வீடியோவை அனுப்பி வைத்ததை அறிந்து ஆசுவாசமடைகிறார். அடுத்தடுத்து செழியனை தன்வசப்படுத்த மாலினி குடைச்சல் கொடுத்தபடி இருக்கிறார். இதுகுறித்து ஓரளவிற்கு தெரியவந்துள்ள நிலையில் உண்மையான நிலை தெரியவந்தால் பாக்கியா என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X