Baakiyalakshmi: பெரிய மனுஷியான மயூ.. கொண்டாட்டத்தில் ராதிகா.. கோபிக்கு வந்த புதிய சிக்கல்!
சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான பல எபிசோட்களை கொடுத்து வருகிறது.
டிஆர்பியில் சற்றே பின்னடைவை சந்தித்தாலும் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருவதால், மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகாப்பு நிறைவடைந்து தற்போது ஜெனி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே ராதிகாவின் மகள் மயூ, தற்போது பெரிய மனுஷியாவதாக காட்டப்பட்டுள்ளது.
இனியாவுடன் ப்ராஜெக்ட் பயணத்திற்கு செல்ல முடியாத கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பான பல எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தொடர் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து சேனலின் முன்னணி தொடராக இருந்து வந்தது. அர்பன் கேட்டகரியிலும் மற்ற சேனல்களின் தொடர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறியது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்து இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த சிறப்பான பல திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. கேன்டீனில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பரிதவித்த பாக்கியா, நிறுவன உரிமையாளரிடம் தன்னுடைய சூழ்நிலையை விளக்கி, இக்கட்டிலிருந்து தப்பிக்கிறார். இதன்மூலம் கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவ இருந்த பிரச்சினையை தீர்க்கிறார். தொடர்ந்து முக்கியமான ஒரு முடிவையும் எடுக்கிறார். கேன்டீன், கல்லூரி, ஆங்கில வகுப்பு, சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என ஓடிக் கொண்டிருந்த அவர் இதனால்தான் கேன்டீனில் பிரச்சினை ஏற்பட்டது என்பதை உணர்கிறார்.
தொடர்ந்து ஆங்கில வகுப்பிலிருந்து நிற்கும் முடிவை எடுக்கிறார். இதன்மூலம் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான போதிலும் இந்த முடிவு அவரது வாழ்க்கையில் முக்கியமானது என்று கூறுகிறார். தொடர்ந்து அவர் ஆங்கில வகுப்பை வீட்டிலேயே தொடர பழனிச்சாமி மற்றும் லோபிகா உதவுகின்றனர். இந்நிலையில் ஜெனியின் வளைகாப்பு சிறப்பாக நடைபெறுகிறது. அனைவரும் அவரை பிரிய மனமில்லாமல் அழுகையுடன் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய மனைவியை அதிகமாக மிஸ் செய்யும் செழியன், அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நிலையில், ஜெனியோ, பாக்கியா உள்ளிட்டவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ஜெனி தன்னை கொஞ்சம்கூட நேசிக்கவில்லை என்று கடுப்பாகிறார் செழியன். இதனிடையே, தன்னுடைய அப்பாவுடன், தன்னுடைய ப்ராஜெக்ட்டிற்காக கிளம்ப இனியா ஆர்வமுடன் தயாராகிறார். கேரளா வரையிலான ரோட் ட்ரிப்பிற்கு அவர்கள் முன்னதாக திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷியாகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் மறுநாள் அவருக்கு சடங்குகளை செய்ய தயாராகின்றனர். ராதிகாவின் அண்ணன், தன்னுடைய மலேசிய ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு அந்த நிகழ்ச்சிக்கு வர திட்டமிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் முதல் ஆளாக கூடவே இருப்பேன் என்று கூறுகிறார் கோபி. அந்த நேரத்தில்தான் இனியாவுடனான பயணம் அவருக்கு நியாபகத்திற்கு வருகிறது.
இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பி, ராதிகாவிடம் இதை கூறுகிறார். ஆனால் ராதிகாவோ, மயூவின் ஃபங்ஷன்தான் முக்கியமானது என்றும், கோபி இல்லாமல் எப்படி விழாவை நடத்துவது என்றும் கேள்வி கேட்கிறார். ப்ராஜெக்ட் வேலையை தள்ளி வைக்க கூறுகிறார். இதனால் இனியாவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. ஏற்கனவே ராதிகாவை திருமணம் செய்த விஷயத்தில் தன் தந்தைமீது அதிருப்தியில் உள்ள இனியா, இந்த விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்வார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











