Baakiyalakshmi: பாக்கியாவின் அதிரடி முடிவு.. பதறிய ஈஸ்வரி.. இனியா!

சென்னை: முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது தொடர்ந்து டிஆர்பியில் கீழிறங்கி வருகிறது.

கடந்த சில வாரங்களாக விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை.

பாக்கியா, கோபி, ராதிகா, ஈஸ்வரி, இனியா என அடுத்தடுத்த கேரக்டர்களின் சிறப்பான எபிசோட்கள் கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி தொடரில் ஒளிபரப்பாகி வருகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes impresses fans more

பாக்கியாவின் அதிரடி முடிவால் பதறிய ஈஸ்வரி: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து பல மாதங்களாக முன்னிலை வகித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் பின் தங்கியுள்ளது. இந்தத் தொடரின் ஒரே மாதிரியான கதைக்களங்கள் ரசிகர்களை கவரத் தவறிய நிலையில் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியது. முதலிடத்தில் சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் நிலை கொண்டது. இந்நிலையில் இந்த வார டிஆர்பியில் மேலும் சில புள்ளிகள் குறைவாக பெற்று மூன்றாவது இடத்திற்கு மேலும் பின்தங்கியுள்ளது பாக்கியலட்சுமி தொடர்.

விஜய் டிவியின் சீரியல்களுக்கான டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள். கடந்த சில வாரங்களாக சொதப்பினாலும் பல்வேறு கதைக்களங்களை சிறப்பாக களமிறக்கி வருகிறது பாக்கியலட்சுமி. இந்நிலையில் அடுத்ததாக இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக தற்போது கேரளா ரோட் ட்ரிப்பிற்கு பாக்கியா, இனியா, செல்வி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் புறப்படுகின்றனர்.

மயூ பெரிய மனுஷியான நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த ரோட் ட்ரிப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க கோபி கேட்ட நிலையில், ஏற்கனவே கல்லூரியில் தன்னுடைய டிபார்ட்மெண்ட் ஹெட் முதலியவர்களிடம் பர்மிஷன் லெட்டர் வாங்கியதால் அதை தள்ளிப் போட முடியாது என்றும் முதல் ப்ராஜெட்டிலேயே தான் சொதப்புவதாக பெயர் ஏற்பட்டு விடும என்றும் இனியா பரிதவித்த நிலையில் தான் பாக்கியா, தன்னுடைய மாமியாரின் உதவியுடன் இந்த பயணத்தில் தானே கலந்துக் கொள்கிறார்.

இந்நிலையில், டிரைவர் ஒருவரின் துணையுடன் இவர்களின் பயணம் துவங்குகிறது. இதையொட்டி டிரைவரிடம் பல்வேறு விசாரணையை மேற்கொண்ட கோபி, மனமில்லாமல் இந்தப் பயணத்திற்கு வழிவிடுகிறார். அவர்களின் பயணம் சென்னையை கூட தாண்டாத நிலையில், டிரைவரின் அப்பாவிற்கு ஆக்சிடெண்ட் என்று போன் வருகிறது. இதனால் அவர் மிகுந்த அழுகையினூடே, பயணத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். 4 பெண்களும் சாலையில் முழித்துக் கொண்டு நிற்கின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes impresses fans more

இதையடுத்து எழில், செழியன் அனைவருக்கும் போன் செய்கிறார் பாக்கியா. ஆனால் அவர்கள் யாரையும் ரீச் செய்ய முடியாத நிலையில், தன்னுடைய கணவன், தன்னை தாம்பரம்கூட தாண்ட மாட்டாய் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த பயணத்தை மேற்கொள்ளாமல் திரும்ப வீட்டிற்கே போகலாம் என்று ஈஸ்வரி கூற, இனியா, என்ன செய்வது என்று தெரியாமல் அழ, பயணத்தை தானே தொடரலாம் என பாக்கியா முடிவு செய்கிறார். இதையடுத்து, வீறு நடை போட்டு, காரை தானே ஓட்டுகிறார். இதனால் ஈஸ்வரி, இனியா மற்றும் செல்வி அனைவரும் பதறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

இதனிடையே, மயூவின் விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. மயூவிற்கு மிகவும் காஸ்ட்லியான தங்க நெக்லசை பரிசளிக்கிறார் கோபி. இதனால் ராதிகா மட்டுமில்லாமல் அவரது அம்மா, அண்ணன், அண்ணி ஆகியோரும் நெகிழ்ச்சிக்குள்ளாகிறார்கள். மேலும் தானே முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்கிறார் கோபி. விழா மேடைக்கு அழகான காஸ்ட்யூமில் மயூ வருவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X