Baakiyalakshmi: இவர் யாருன்னே எனக்கு தெரியாது.. போலீசாரிடம் கோபியை போட்டுக்கொடுத்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தொடர்ந்து பாக்கியலட்சுமி -பழனிச்சாமி நட்பை சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பி வருகிறார் கோபி. இதனால் பாக்கியாவை எரிச்சல் படுத்தி வருகிறார்.

அவர் ஒழுக்கமாக நடந்துக் கொள்ளாத நிலையில், தன்னுடைய ஒழுக்கத்தை கேள்வி கேட்பது பாக்கியாவிடம் ஆத்திரத்தை உண்டு செய்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes everyone stunning

கோபி குறித்து போலீசாரிடம் புகார் சொன்ன பாக்கியா: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், சேனலின் நம்பர் ஒன் தொடராக காணப்படுகிறது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் சுவாரஸ்யமாக தரப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான ரசிகர்கள் கவரப்பட்டு வருகின்றனர். அதிகமான போராட்டங்களுக்கிடையில் தன்னுடைய மகன்களும் கைக்கொடுக்க, கோபியிடம் இருந்து வீட்டை மீட்டு, தன்னுடைய பெயரில் ரிஜிஸ்டரும் செய்கிறார். இதனால் குடும்பத்தினர், கோபி மற்றும் ராதிகாவின் அதிகப்படியான அலப்பறைகளில் இருந்து தப்பித்து நிம்மதி அடைகின்றனர்.

இதையடுத்து தன்னுடைய மகள் இனியாவை கல்லூரியில் சேர்க்கப் போகும் பாக்கியாவிற்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆசை துளிர்க்கிறது. இதை எழில் சாத்தியப்படுத்துகிறார். பாக்கியாவின் இந்த முடிவு கோபியை அதிகமான குழப்பத்திலும் கடுப்பிலும் ஆழ்த்துகிறது. பாக்கியா இதை செய்யாமல் தடுக்க தன்னால் இயன்ற வேலைகளை செய்கிறார். தொடர்ந்து அவரது ஆங்கில வகுப்பு இன்ஸ்ட்டியூட்டிற்கே சென்று இதுகுறித்து கேட்க முயல்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes everyone stunning

அந்த நேரத்தில் பழனிச்சாமி மற்றும் பாக்கியா இடையில் ஆங்கில உரையாடல் குறித்த டாஸ்க் நடக்கிறது. அதில் பழனிச்சாமி பாக்கியாவிடம் ப்ரபோஸ் செய்வதாக காணப்படுகிறது. இந்த காட்சியை பார்க்கும் கோபியின் நெஞ்சே வெடிக்கிறது. பயங்கர கடுப்புடன் அவர் பழனிச்சாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து போகும்வழியில் பாக்கியாவை இடைமறிக்கும் அவர், அவரிடம் இதுகுறித்து கேட்டு சண்டை இழுக்கிறார்.

சாலையில் சண்டை பயங்கரமாக நடக்கிறது. இருவரும் வாக்குவாதம் செய்வதை அங்கிருக்கும் அனைவரும் பார்க்கின்றனர். பாக்கியாவின் ஒழுக்கம் குறித்து சாலையென்றும் பார்க்காமல் கேள்வி எழுப்புகிறார். வயதுவந்த பெண்ணை வைத்துக் கொண்டு அவர் ஆட்டம் போடுவதாக குற்றம் சாட்டுகிறார். இன்னும் சில வாரங்களில் மூத்த மகனுக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அடங்காமல் திரிவதாகவும் கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes everyone stunning

இதனால் பாக்கியா பயங்கரமான கடுப்பிற்கு உள்ளாகிறார். கண்மண் தெரியாமல் ஆட்டம்போட தான் ஒன்றும் கோபி இல்லை என்றும், அவர் திருமணம் செய்தபோது, முன்னதாக தன்னை ஏமாற்றி ராதிகாவுடன் தொடர்பில் இருந்தபோது அவருக்கும் மூன்று வளர்ந்த பிள்ளைகள் இருந்தது தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு காவல்துறையினர் வருகின்றனர்.

அவர்கள் இவர்களது சண்டை குறித்து விசாரிக்கின்றனர். அப்போது குடும்ப விவகாரம் குறித்து தாங்கள் பேசிக் கொண்டிருப்பதாக கோபி கூறுகிறார். ஆனால் பயங்கரமான கோபத்துடன் இருக்கும் பாக்கியா, அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரை விசாரிக்கும்படியும் கூறுகிறார். இதனால் கோபி அச்சப்படுகிறார். என்ன நடக்குமோ என்றும் தன்னை பாக்கியா அவமானப்படுத்தியதாகவும் நினைக்கிறார். ஆனால் அவரை எச்சரித்து அனுப்புகின்றனர் காவல்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X