Baakiyalakshmi: கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் பாக்கியா.. நிறைவேறுமா கனவு?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.
தன்னுடைய மகள் இனியாவை புதிய கல்லூரியில் அவரது மனதிற்கினிய படிப்பில் சேர்த்துவிடுகிறார் பாக்கியலட்சுமி.
கல்லூரிக்கு கோபியும் வர, பிரின்சிபலிடம் கெத்தாக ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார் பாக்கியா. கோபி அதிர்ச்சியில் உறைகிறார்.

கல்லூரியில் இணைந்து படிக்க ஆசைப்படும் பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து இடம்பிடித்து கெத்துக் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியாவின் வளர்ச்சியும் கோபியின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் காட்டப்படுகின்றன. ராதிகாவும் தன்னுடைய பங்கிற்கு தன்னுடைய அலுவலகத்தில் பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வை சந்தித்து வருகிறார். ஆனால் இனியாவிற்கு கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக கோபி, தன்னுடைய நண்பர் செந்திலிடம் 50,000 பணத்தை வாங்கும் சூழலில் உள்ளார்.
+2வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்வாகிறார் இனியா. அவரை பிபிஎம் படிக்கச் சொல்லி கோபி கூறுகிறார். தொடர்ந்து எம்பிஏ படித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அறிவுறுத்துகிறார். ஆனால் இனியாவிற்கோ விஸ்காம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம். அவரது ஆசையை புரிந்துக் கொள்கிறார் பாக்கியா. அவர் விரும்பிய படிப்பை படிக்க அவருக்கு கைக்கொடுக்கிறார். விரும்பிய கல்லூரியிலும் சேர்த்து விடுகிறார்.
கல்லூரியில் சேர்ப்பதற்காக தன்னுடைய மகள் இனியாவுடன் கல்லூரிக்கு தனியாகத்தான் செல்கிறார் பாக்கியா. அந்த அளவிற்கு அவரது தன்னம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அங்கு பிரின்சிபல் உள்ளிட்டவர்களுடன் மிகவும் கெத்தாக பேசி, தன்னுடைய மதிப்பை சிறப்பாக உயர்த்துகிறார். இதை பார்க்கும் கோபி அதிர்ச்சியில் உறைகிறார். இனியாவிற்கோ பெருமை தாளவில்லை. இந்நிலையில், பிரம்மாண்டமான அந்த கல்லூரியை பார்க்கும் பாக்கியாவிற்கு கல்லூரியில் இணைந்து படிக்கும் ஆசை வருகிறது.
இந்த ஆசைக்கு கைகொடுக்கிறார் பழனிச்சாமி. படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்றும் 108 வயதில் ஒரு பாட்டி, கல்லூரியில் படித்து டிகிரி வாங்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதை கேட்கும் பாக்கியாவிற்கு ஆசை மேலும் அதிகரிக்கிறது. இதுகுறித்து செல்வியிடமும் தன்னுடைய ஆசையை பகிர்ந்துக் கொள்கிறார். ஆனால் பாக்கியாவிற்கு அதற்கு தேவையான நேரம் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் செல்வி.

வீட்டு வேலைகள், குழந்தைகளை பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் பராமரித்து, கேன்டீன், சமையல் கான்டிராக்ட் என ஓடிக் கொண்டிருக்கும் தனக்கு இதற்கான நேரம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் பாக்கியா, ஆனால் கல்லூரிக்கு சென்று படித்து, கருப்புக் கோட் போட்டுக் கொண்டு தான் டிகிரி வாங்கினால் எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறார் பாக்கியா. சூப்பராக இருக்கும் என்று செல்வியும் உற்சாகத்துடன் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
இதனிடையே ஜெனி மற்றும் செழியன் இருவரும் தங்களது குழந்தை குறித்து பேசிக் கொள்கின்றனர். செழியனின் இனிய மாற்றம் தனக்கு பெருமையை கொடுப்பதாக கூறும் ஜெனி, தனக்கு நடக்க வேண்டிய வளைகாப்பு குறித்து பேசுகிறார். தொடர்ந்து குழந்தை பிறப்பிற்காக தான் அம்மா வீட்டிற்கு இரண்டு மாதங்கள் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுகிறார். ஆனால் அவர் அவ்வாறு போகக்கூடாது என்று செழியன் கண்ப்பாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











