Baakiyalakshmi: மீண்டும் பாக்கியா -பழனிச்சாமியை இணைத்து பார்க்கும் கோபி.. மீண்டும் எங்கே நிம்மதி!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

கோபி குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து சில தினங்கள் அவருடன் செலவழிக்க முடிவு செய்து புதுச்சேரியில் நடக்கும் தன்னுடைய குடும்ப நண்பர் திருமணத்திற்கு செல்கிறார் ராதிகா.

முன்னதாக அந்தத் திருமணத்தின் சமையல் ஆர்டருக்காக அங்கே செல்லும் பாக்கியாவை பார்த்து ராதிகா ஆத்திரமடைகிறார்.

ஒரே இடத்தில் பாக்கியா -பழனிச்சாமி -குழப்பத்தில் கோபி: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக தொடர்ந்து இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் Urban Categoryயில் கடந்த வாரத்தில் ஒட்டுமொத்த சேனல்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. 10க்கும் அதிகமான பாயிண்ட்களை இந்த தொடர் பெற்று தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக முன்னணியில் உள்ளது. இதன்மூலம் சன்டிவி சேனலை இந்த கேட்டகரியில் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo and episodes makes fans more enthusiastic

இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. குடும்பத்தில் ஏற்படும் சண்டை ஒன்றில், தன்னுடைய மாமியார் ஈஸ்வரியை ஒருமையில் பேசி அவமானப்படுத்துகிறார் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா. இதையடுத்து கோபப்படும் பாக்கியாவை கோபி, கேள்விக் கேட்கிறார். இதனால் சண்டை முற்ற, ஒரு கட்டத்தில் தான் வீட்டிற்காக கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் தருவதாக பாக்கியா சவால் விடுகிறார்.

அப்படி கொடுத்துவிட்டால், கோபி அவரது குடும்பத்தை கூட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் சவால் விடுகிறார். அவர் எங்கே கொடுத்துவிடப் போகிறார் என்ற அலட்சியத்தில், கோபியும் இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து தன்னுடைய சவாலுக்கு மீறிய திருமண சமையல் ஆர்டர் ஒன்றை பழனிச்சாமியின் சிபாரிசில் கையில் எடுக்கிறார் பாக்கியா. மூன்று நாட்கள் நடைபெறும் அந்த திருமணத்திற்காக புதுச்சேரிக்கு செல்கிறார்.

என் கெரகம் என்னும்படியாக அந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டு பேமிலி ப்ரெண்டாக ராதிகாவும் தன்னுடைய கணவன் கோபியை அழைத்துக் கொண்டு வருகிறார். இந்த திருமணத்திற்காக 4 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு ராதிகாவுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற கனவுடன் வரும் கோபிக்கு, அங்கும் அதிர்ச்சியே காத்திருக்கிறது. அந்த திருமணத்தில் லாம்ப் போஸ்ட் என்று அவர் கூறும் பழனிச்சாமி இருப்பதை பார்த்து விடுகிறார் கோபி.

தொடர்ந்து குழப்பத்துடன் அவர் செல்ல, அங்கே ராதிகாவும் ஆட்டம் போட்டுக் கொண்டே வரும் செல்வியை பார்த்துவிட்டு வந்து அவரிடம் கூறுகிறார். இதையடுத்து பழனிச்சாமியும் செல்வியுடன் திருமணத்தில் இருப்பதை யோசிக்கும் கோபி, அப்பொழுது தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியாவும் அங்கே வந்திருப்பார் என்பதை கணிக்கிறார். இதனால் அவரது குழப்பம் மீண்டும் துவங்குகிறது. ஏற்கனவே தன்னுடைய மனைவியைத்தான் பழனிச்சாமி பெண் பார்க்க வருவதாக நினைத்துக் கொண்டு, பழனிச்சாமியிடமே சென்று சண்டையிட்ட கோபி தற்போது, இந்தத் திருமணத்தில் எப்படி நடந்துக் கொள்வார் என்பதை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X