Baakiyalakshmi: ராதிகாவிற்கு சம்பள உயர்வுடன் ப்ரமோஷன்.. முகம் வாடிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் அடுத்தடுத்த எபிசோட்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் பல பரபரப்பான கட்டங்களுடன் பயணம் செய்தது. பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டை பாக்கியா பேரில் கோபி ரிஜிஸ்டர் செய்துக் கொடுத்துவிட்டார்.

அவர் கடைசி நேரத்தில் ஏதாவது குளறுபடி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தைக்கு பயந்து ரிஜிஸ்ட்ரேஷனை அவர் முடித்துள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans feels bad on Gopi

ராதிகாவிற்கு கிடைத்த சம்பள உயர்வால் கோபி வருத்தம்: விஜய் டிவியின் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர்ந்து நிலைக் கொண்டுள்ளது. குறைவான கேரக்டர்களுடன் நிறைவான எபிசோட்களை கொடுத்துவரும் இந்தத் தொடர் ரசிகர்களின் பேவரைட்டாக தொடர்ந்து உள்ளது. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகாவுடன் அவர்களது குறைவான சொந்தங்களையும் இணைத்து இந்தத் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக வீட்டை கோபியிடம் இருந்து மீட்கும் போராட்டத்தில் அதிகமான பிரச்சினைகளை சந்தித்து வந்தார் பாக்கியா. பாண்டிச்சேரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமணத்தில் சமையல் கான்டிராக்டை எடுத்து, கோபியின் குறுக்கீடுகள் உள்ளிட்டவற்றுடன் அதை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அந்த கான்டிராக்டின் மூலம் கிடைத்த பணம், எழில், செழியன் கொடுத்த பணம் என அனைத்தையும் சேர்த்து கோபிக்கு வீட்டிற்கான மீதமுள்ள பணத்தை செட்டில் செய்தார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans feels bad on Gopi

இதை சிறிதும் எதிர்பார்க்காத கோபி, அதிர்ச்சியில் உறைந்தார். அவருடன் இருந்த ராதிகாவிற்கும் இதேநிலை தான். தொடர்ந்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகின்றனர் பாக்கியா அண்ட் குடும்பத்தினர். பணத்தை பெற்றாலும் தொடர்ந்து வீட்டிலேயே டேரா போட நினைத்த கோபியின் நினைப்பில் அவரது அப்பா மற்றும் பிள்ளைகளே மண்ணள்ளிப் போடுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

தொடர்ந்து எந்தவிதமான குளறுபடியும் செய்யாமல், வீட்டை பாக்கியா பேருக்கு ரிஜிஸ்டர் செய்துக் கொடுக்கிறார் கோபி. கூடவே இருந்து அவரது அப்பா ராமமூர்த்தியும் அவரை மிரட்டி, பணியவைக்கிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு வரும் கோபி, எதிரில் தனக்கு சொந்தமாக இருந்த வீடு, பாக்கியா இல்லமாக மாறியுள்ளதை பார்த்து வயிற்றெரிச்சல் படுகிறார். ராதிகாவும் அவரை ஏற்றி விடுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans feels bad on Gopi

இந்நிலையில், இன்றைய எபிசோடில், தன்னுடைய ஆங்கில வகுப்பில் பாக்கியா தேர்வு எழுதுகிறார். தொடர்ந்து அடுத்தக் குழந்தை குறித்து தன்னுடைய அம்மா பேசியதை வைத்து எழிலிடமும் இதுகுறித்து டிஸ்கஸ் செய்கிறார் அமிர்தா. ஆனால் தங்களுக்கு நிலா மட்டும்தான் குழந்தை என்று அவர் கட் அண்ட் ரைட்டாக கூறிவிடுகிறார். இதனிடையே, ராதிகாவின் அலுவலகத்தில் அவருக்கு சம்பள உயர்வுடன் கூடிய ப்ரமோஷன் கிடைக்கிறது.

அவர் அதை கோபி மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் இனிப்புடன் பகிர்கிறார். ப்ரமோஷனை கேட்டு அவரை வாழ்த்தும் கோபி, சம்பளம் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதை கேட்டுவிட்டு முகம் மாறுகிறார். தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் ராதிகா இருவரும் இதுபோல தன்னைவிட முன்னேறுவது அவருக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. இதையடுத்து உடனடியாக குடிக்க செல்ல முயல்கிறார். அவரை ராதிகா தடுப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X