Baakiyalakshmi: பாக்கியாவை நம்பி எங்க வேணும்னாலும் போவேன்.. ஈஸ்வரியிடம் மொக்கை வாங்கிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக கேரளாவிற்கு ரோட் ட்ரிப்பிற்கு அழைத்து சென்றுள்ளார் பாக்கியா.

கோபியுடன் இந்தப் பயணம் முன்னதாக திட்டமிடப்பட்ட நிலையில், மயூ பெரிய மனுஷியானதால் அந்த பயணம் தடைப்பட்டது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes everyone happy

பாக்கியா விஷயத்தில் ஈஸ்வரியிடம் மொக்கை வாங்கிய கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. கடந்த சில வாரங்களாக இறங்குமுகத்தில் இருந்த இந்தத் தொடரின் டிஆர்பி தற்போது மீண்டும் ஏறுமுகத்திற்கு வந்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருந்து மீண்டும் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ள இந்த தொடர், மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த சில தினங்களாக பல்வேறு சுவாரஸ்யங்களை இந்தத் தொடர், அடுத்தடுத்த எபிசோட்களில் கொடுத்து வருகிறது.

இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட் வேலைக்காக கேரளாவிற்கு ரோட் ட்ரிப்பிற்கு கோபி திட்டமிட்ட நிலையில், அவரால் வரமுடியாத சூழலில் ட்ரிப்பை தொடர்கிறார் பாக்கியா. இந்தப் பயணத்தில் ஈஸ்வரி மற்றும் செல்வியும் இணைந்துக் கொள்கின்றனர். இவர்கள் நால்வரும் இணைந்து கேரளாவிற்கு பயணமாகும் நிலையில் வழியில் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்களை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளை காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes everyone happy

கேரள பயணத்தின் துவக்கத்திலேயே டிரைவர், அவரது அப்பாவிற்கு ஆக்சிடெண்ட் ஆனதாக இவர்களை விட்டுவிட்டு செல்ல, தொடர்ந்து தானே காரை ஓட்டிக் கொண்டு பயணத்தை தொடர்கிறார் பாக்கியா. இதையடுத்து கேரளாவில் ஹோட்டலில் ஹோல்ட் செய்யப்பட்ட அறை கிடைக்காமல் திண்டாடி, இரவு நேரத்தில் வேறு ஹோட்டலில் ரூம் பார்த்து இவ்வாறு பலவித அவதிகளை படுகின்றனர். தொடர்ந்து, மறுநாள் காட்டுக்குள் பயணம் மேற்கொள்ள அங்கே ஈஸ்வரி காணாமல் போகிறார்.

இனியா மூலம் விஷயம் தெரியவர பாக்கியாவிடம் தன்னுடைய அதிகப்படியான கோபத்தை காட்டுகிறார் கோபி. அனைவரையும் உடனடியாக திரும்ப வீட்டிற்கு வருமாறு கூறுகிறார். ஆனால் தன்னுடைய மருமகள் பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்கிறார் ஈஸ்வரி. தொடர்ந்து கோபியையும் திட்டுகிறார். திட்டு வாங்கியும் மீண்டும் தன்னுடைய அம்மாவிற்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கால் செய்கிறார். காட்டில்தான் இருக்கிறேன் என ஈஸ்வரி சொல்ல, இதையடுத்து கோபி பதற்றப்படுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes everyone happy

ஆனால் தொடர்ந்து பேசும் ஈஸ்வரி, தன்னுடைய மருமகள் பாக்கியாவை நம்பி தான் எங்கே வேண்டுமானாலும் போவேன் என்று பதில் சொல்கிறார். இதனால் பாக்கியாவை மட்டம் தட்ட நினைக்கும் கோபிக்கு மொக்கை கொடுப்பதாக இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது. தொடர்ந்து பெண்கள் அனைவரும் இணைந்து இதுபோல ட்ரிப்பிற்கு வருவது சிறப்பாக உள்ளதாகவும் இதுபோல அடிக்கடி வர வேண்டும் என்றும் கூறி பாக்கியா உள்ளிட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் ஈஸ்வரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X