Baakiyalakshmi: நீ காலேஜ்ஜை விட்டுடலாம் இல்ல.. பாக்கியாவிற்கு கொக்கி போடும் இனியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வந்தது பாக்கியலட்சுமி.
இந்தத் தொடரின் பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக என்ஜாய் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களால் இந்தத் தொடர் தன்னுடைய சுவாரஸ்யங்களை இழந்துள்ளது. இதனால் டிஆர்பியிலும் அடுத்த இடத்திற்கு இறங்கியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி தொடராக கடந்த பல மாதங்களாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த சில நாட்களாக இரண்டாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது. டிஆர்பியிலும் பின்தங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக, பாக்கியா கல்லூரியில் இணைந்த காட்சிகளை தொடர் ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் மீண்டு பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களை சுற்றிய சொந்தங்களையும் அடிப்படையாக கொண்டு, இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தன்னுடைய கல்லூரிக்கால காதலை மீட்டுருவாக்கம் செய்யும் கோபி, அதற்காக தன்னுடைய மனைவி மற்றும் சொந்தங்களை விட்டு விலகுகிறார். பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வசந்தத்தை இந்த புதிய சொந்தம் தராத நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.

இதனிடையே, கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ், ஆங்கில வகுப்பு மற்றும் கல்லூரி என அடுத்தடுத்த தளங்களில் சாதிக்கும் தன்னுடைய முன்னாள் மனைவியின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாமல், தொடர்ந்து பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார். இதனால் ராதிகாவின் கடுப்பிற்கும் உள்ளாகிறார். தானும் நிம்மதியை இழந்து, பாக்கியாவிற்கும் நிம்மதி இல்லாமல் செய்கிறார்.
இதனிடையே, ஆங்கில வகுப்பில் பாக்கியாவுடன் படிக்கும் பழனிச்சாமியுடன் அவரை சம்மந்தப்படுத்திப் பார்த்து, அதையொட்டி, பாக்கியா, பழனிச்சாமியிடம் மட்டுமில்லாமல் அவரது அம்மாவிடமும் தொடர்ந்து புகார் தெரிவிக்கிறார். சண்டையிடுகிறார். தன்னுடைய மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இருக்கும் நட்பை, வேறுவிதமாக பார்க்கிறது அவரது மனது. இந்நிலையில் பாக்கியா கல்லூரியில் சேர்ந்தது குறித்தும் தன்னுடைய மகள் இனியாவிடம் மூட்டி விடுகிறார்.

அவருக்கும் தன்னுடைய அம்மா, கல்லூரியில் சேர்ந்ததில் உடன்பாடு இல்லாத நிலையில், அம்மாவிடம் அதுகுறித்து பேசுகிறார். ஏன் இப்படி, பலவிதங்களில் தன்னை அவர் பாடு படுத்துகிறார் என்றும் கல்லூரியில் படிப்பதில் இருந்து விலகலாமே என்றும் இனியா நைசாக பாக்கியாவிடம் பேசுகிறார். கோபி சொல்லித்தான் இனியா இவ்வாறு பேசுகிறார் என்பதை தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, இதுகுறித்து இனியாவிற்கு புரிய வைக்கிறார்.
தன்னுடைய கல்லூரி கனவு நியாயமானது என்றும் அதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் கூறும் பாக்கியா, ஆனால் கோபி, தன்னுடைய கல்லூரி காதலை நனவாக்கியதால், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாக்கியா இனியாவிற்கு புரிய வைக்கிறார். தன்னுடைய இளமை காலத்தில் தான் படிக்கத் தவறிய கல்லூரி படிப்பை தற்போது படிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











