Baakiyalakshmi: கண்ணாமூச்சு விளையாட்டு காட்டும் மாலினி.. வீட்டை விட்டு துரத்திய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் கோபிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி.

ஈஸ்வரியின் இந்த செய்கையால் கடுப்பாகிறார் பாக்கியா. முன்னதாக கோபி இந்த வீட்டிற்கு வந்தால் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
மாலினியை வீட்டை விட்டு வெளியேற்றும் பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கோபிக்கு நெஞ்சு வலி வந்ததையடுத்து, ராதிகாவிடம் சண்டை போட்டு, அவரை பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. முன்னதாக கோபியை தான் அழைத்து வரப் போவதாக ஈஸ்வரி கூறிய நிலையில், அவர் அந்த வீட்டிற்கு வந்தால் தான் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று பாக்கியா கூறியிருந்தார்.
இந்த வார ப்ரமோ: ஆனாலும் அவரது எச்சரிக்கைகளை மீறி, ராதிகாவிடம் சண்டையிட்டு கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஈஸ்வரி. இதனால் பாக்கியாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனிடையே இந்த வார சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் செழியனை பார்க்க வரும் மாலினி செய்யும் செயல் குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
கண்ணாமூச்சு விளையாட்டு: செழியனை பார்க்க வரும் மாலினி குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது யாரும் அங்கில்லாத நேரத்தில் குழந்தையை மறைத்து கண்ணாமூச்சு ஆட்டம் ஆடுகிறார். குழந்தை எங்கே என குடும்பத்தினர் கேட்க, செல்வியிடம்தான் கொடுத்ததாக பொய் கூறுகிறார். அலறியடித்துக் கொண்டு தன்னிடம் குழந்தையை கொடுக்கவில்லை என்று கூற, குடும்பத்தினர் அனைவரும் குழந்தையை பரிதவிப்புடன் தேடுகின்றனர்.
ஆத்திரத்தில் பாக்கியா: ஒரு கட்டத்தில் குழந்தையை மாடியில் மறைத்து வைத்த மாலினி, குழந்தையை எடுத்துவர அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பாக்கியா மிகுந்த கோபத்துடன், அவரிடம் குழந்தை குறித்து விசாரிக்கிறார். பதிலுக்கு தான் விளையாட்டிற்காக இப்படி செய்ததாக மாலினி கூற, செழியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கடுப்பாகின்றனர். இதையடுத்து, மாலினியிடம் கோபப்படும் பாக்கியா, அவருடைய விளையாட்டு எல்லாம் ஓவராக இருப்பதாக கத்தி கூறுகிறார்.
துரத்தப்படும் மாலினி: தொடர்ந்து ஆபீஸ் வேலை ஆபீசுடன் இருக்க வேண்டும் என்றும் இனிமேல் வீட்டின் பக்கம் வர வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் செழியனை மாலினி பார்க்க, அவரும் ஒன்றும் சொல்லாமல் கோபத்துடன் பார்க்கிறார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்புமாறு பாக்கியா கூற, வீட்டை விட்டு வெளியேறும் மாலினி, கோபத்துடன் செழியனை பார்க்கிறார். அவர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பதாக இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











