Baakiyalakshmi: அமிர்தா விவகாரம்.. தவிக்கும் பாக்கியா.. என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல்களில் முக்கியமான தொடராக அமைந்துள்ளது பாக்கியலட்சுமி.

இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

 Vijay TVs Baakiyalakshmi serial today episode makes fans thrilling

சாதாரண குடும்பத் தலைவியாக தன்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்து, தன்னுடைய கேரியரையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பாக்கியா.

அமிர்தாவை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கும் பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அமிர்தாவின் கணவன் கணேஷ் குறித்து தெரியவந்துள்ள நிலையில் தன்னுடைய மகன் எழிலின் வாழ்க்கை என்னவாகுமோ என்ன அச்சம் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலாவை தன்னுடைய மாமனார் வெளியில் கூட்டிச் செல்ல போவதாக கூறுவதை தடுக்கிறார் பாக்கியா. பார்க்கில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் என்று அதற்கு காரணம் கூறுகிறார்.

இதையடுத்து ஈஸ்வரியுடன் அமிர்தா கோயிலுக்கு செல்ல முயல்கிறார். அதையும் தடுத்து நிறுத்துகிறார் பாக்கியா. தானே ஈஸ்வரியுடன் கோயிலுக்கு செல்கிறார். இதையடுத்து மாமியார் ஈஸ்வரியிடம் அமிர்தா குறித்த உண்மையை சொல்லிவிடலாமா என்று நினைக்கிறார். ஆனால் அந்த நினைப்பையும் அவர் கைவிடுகிறார். அமிர்தா மற்றும் நிலாவை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்க நினைக்கிறார் பாக்கியா. இதனால் அமிர்தாவின் விவகாரத்தில் அவர் என்ன மாதிரியான முடிவெடுத்து தன்னுடைய மகனின் வாழ்க்கையை காப்பாற்றுவார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 Vijay TVs Baakiyalakshmi serial today episode makes fans thrilling

இதனிடையே தன்னுடைய அம்மாவின் 60வது பிறந்தநாளையொட்டி கோபி, 4 சவரனின் செயின் வாங்கி கிப்ட் செய்யவேண்டும் என்று ராதிகா கூறுகிறார். ஏற்கனவே அடுத்தடுத்து கிரெடிட் கார்ட் பில்களை கட்டாமல், வங்கிகளின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கோபி, இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று முழி பிதுங்கி நிற்கிறார். தன்னுடைய பிரச்சினைகளை ராதிகாவிடம் கூறினால் அவர் தன்னை மதிக்காத நிலை ஏற்படும் என்று அவர் நினைப்பதே இதற்கெல்லாம் காரணம்.

இதனிடையே தன்னுடைய அம்மாவின் 60வது பிறந்தநாளையொட்டி கோபி, 4 சவரனில் செயின் வாங்கி கிஃப்ட் செய்யவேண்டும் என்று ராதிகா கூறுகிறார். ஏற்கனவே அடுத்தடுத்து கிரெடிட் கார்ட் பில்களை கட்டாமல், வங்கிகளின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கோபி, இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று முழி பிதுங்கி நிற்கிறார். தன்னுடைய பிரச்சினைகளை ராதிகாவிடம் கூறினால் அவர் தன்னை மதிக்காத நிலை ஏற்படும் என்று அவர் நினைப்பதே இதற்கெல்லாம் காரணம்.

இதனிடையே பணம் கிடைக்காமல் வீடு திரும்பும் கோபி, ஷாப்பிங் போக தயாராக இருக்கும் ராதிகா மற்றும் மயூவிடம் தனக்கு தலை வலிப்பதாக கூறி சமாளிக்கிறார். இதனால் மயூ ஏமாற்றமடைகிறார். அவரை ராதிகா சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. அவருக்கு இன்னமும் கோபியில் நிதி நிலைமை குறித்து தெரியாத நிலையில், தொடர்ந்து கோபியிடம் அடுத்தடுத்து பணம் கேட்கிறார். பாக்கியாவிடம் இருந்து வீட்டிற்காக கிடைத்த 20 லட்சத்தையும் பிக்சட் டெபாசிட் செய்துள்ளார் ராதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X