Bharathi kannamma 2: வெறுத்து ஒதுக்கிய குடும்பத்தினர்.. பாரதி -கண்ணம்மா ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா 2 சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்த நிலையில், உடனடியாக இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது.

Vijay TVs Bharathi kannamma 2 serial makes fans more interesting

பாரதி கண்ணம்மா சீசன் 2 முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறது. தற்போது முக்கியமான மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது.

பாரதியை வெறுத்து ஒதுக்கும் சவுந்தர்யா: விஜய் டிவி அடுத்தடுத்த சிறப்பான தொடர்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெறும் தொடர்களை நீக்கிவிட்டு, ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களை கொடுக்கும் இயக்குநர்களின் புதிய தொடர்களை கொடுக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. அந்த வகையில் ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்துவந்த பாரதி கண்ணம்மா தொடர் ஒரு கட்டத்தில் அதில் தவறிய நிலையில், சீரியலை முடித்து வைத்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தத் தொடரின் சீசன் ஒன்று நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் பாகத்தில் நகரத்து சப்ஜெக்டில் ஹீரோ டாக்டராக இருந்தார். வில்லியும் டாக்டர்தான். ஆனால் தற்போது இரண்டாவது சீசனில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் கிராமத்து சூழலில் சீரியலை ஒளிபரப்பி வருகிறது. தொடரில் ஊதாரித்தனமாக சுற்றிவந்த ஹீரோ பாரதி, கண்ணம்மாவின்மீது ஏற்படும் காதலால் மாற்றம் அடைகிறார்.

Vijay TVs Bharathi kannamma 2 serial makes fans more interesting

முற்றிலும் நல்லவராக மாறும் பாரதி, கண்ணம்மாவின் காதலுக்காக பரிதவிக்கிறார். அதிகமான பிரயத்தனங்களை மேற்கொள்கிறார். ஒருகட்டத்தில் பாரதியின் உண்மையான காதலை புரிந்துக் கொள்ளும் கண்ணம்மா அவரை ஏற்றுக் கொள்கிறார். இதனிடையே ஒரு விபத்திலிருந்து பாரதியின் அம்மா சவுந்தர்யாவை காப்பாற்றும் வெண்பா, அதையே துருப்புச்சீட்டாக வைத்து பாரதியை அடைய சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு சவுந்தர்யாவும் பலியாகிறார்.

பாரதி -வெண்பாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் சவுந்தர்யா. முன்னதாக பாரதியை மிரட்டி நிச்சயதார்த்தத்தை நடத்திய அவருக்கு பாரதி -கண்ணம்மாவின் காதல் தெரியவருகிறது. இந்நிலையில், நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் நடத்த பாரதியை கோயிலுக்கு குடும்பத்துடன் அழைத்து செல்கிறார் சவுந்தர்யா. ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. மாறாக பாரதி கண்ணம்மாவை மணக்கிறார். நீண்ட போராட்டத்திற்கு பிறகே இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார் கண்ணம்மா.

இந்நிலையில், இந்தத் திருமணத்தால் வெண்பாவின் சூழ்ச்சி பலிக்காத நிலையில், அவர்கள் சவுந்தர்யாவை திட்டித் தீர்க்கின்றனர். இதனால் அவமானப்படும் சவுந்தர்யா, பாரதியை கடுமையாக பேசுகிறார். வீட்டின் வாசலை பாரதி மிதிக்கக்கூடாது என்று கோபத்துடன் கூறுகிறார். இதனிடையே, கண்ணம்மாவின் அப்பாவும், அவர் தன்னுடைய மகளே இல்லை என்றும் தனக்கு அவமானத்தைத் தேடித் தந்ததாகவும் கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார்.

Vijay TVs Bharathi kannamma 2 serial makes fans more interesting

அனைவரும் சென்றாலும் மது மற்றும் தண்டபாணி மட்டும் பாரதி -கண்ணம்மாவுடன் இருக்கின்றனர்.அவர்கள் அனைவரும் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று கண்ணம்மாவை சமாதானப்படுத்துகிறார் பாரதி. இருவீட்டினரும் அவர்களை கைவிட்ட நிலையில், அடுத்ததாக அவர்கள் எங்கே எப்படி தங்களது வாழ்க்கையை துவங்குவார்கள் என்பது குறிதது அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்தத் தொடர் அதிகமான டிஆர்பியை பிடிக்காத காரணத்தால் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போதுதான் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது பாரதி கண்ணம்மா 2. இந்நிலையில், இந்தத் தொடரை முடிப்பது சாத்தியமில்லாதது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் விருப்பமாகவும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு விஜய் டிவியும் தொடரை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X