Bharathi kannamma 2: பாரதி -வெண்பா திருமணம்.. பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி அத்தியாயம்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியல் இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது.
இந்தத் தொடரில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் சவுந்தர்யாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தை அடுத்து அவர்களை வீட்டை விட்டே துரத்தும் சவுந்தர்யா ஒரு கட்டத்தில் வீட்டிற்குள் அனுமதிக்கிறார்.

பாரதிக்கும் வெண்பாவிற்கும் அரங்கேறும் திருமண ஏற்பாடு: விஜய் டிவியின் முக்கியமான தொடர்களின் வரிசையில் பாரதி கண்ணம்மா 2 தொடருக்கும் சிறப்பான இடம் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே தற்போது தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போதுதான் தொடர் சூடு பிடித்துவந்த நிலையில், இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணம்மாவை கண்மூடித்தனமாக காதலித்த பாரதி, அவரது சோகமான கதை மற்றும் அதையொட்டிய சிறை வாழ்க்கை குறித்து அறிந்தும் அவரை தொடர்ந்து காதலிப்பதாக கூறுகிறார். முதலில் அவரது காதலை மறுக்கும் கண்ணம்மா, ஒரு கட்டத்தில் அவரது உண்மையான அன்பை புரிந்துக் கொண்டு காதலை ஏற்கிறார். தொடர்ந்து, தனக்கும் வெண்பாவிற்கும் திருமணம் செய்து வைக்க தன்னுடைய அம்மா முயற்சிப்பதை பார்த்து, கண்ணம்மாவை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறார் பாரதி.
இவர்களது திருமணத்தை ஏற்க முடியாத சவுந்தர்யா, இருவரையும் வீட்டை விட்டே துரத்துகிறார். தொடர்ந்து தன்னுடைய சொத்துக்களை வெண்பா மீதும், தன்னுடைய மகள் அஞ்சலி மீதும் எழுதி வைக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாத பாரதி, கண்ணம்மாதான் தன்னுடைய சொத்து என்று கூறுகிறார். ஒருகட்டத்தில் இவர்களை வீட்டைவிட்டு சவுந்தர்யா துரத்தியது, மீடியாவிற்கு போக, விசாரணைக்காக கலெக்டரே வீடு தேடி வருகிறார். இதனால் பாரதி மற்றும் கண்ணம்மாவை வீட்டிற்குள் அனுமதிக்கிறார் சவுந்தர்யா.
இந்நிலையில் பாரதியின் அப்பாதான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்த வேணுகோபால் என்பது கண்ணம்மாவிற்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைகிறார். இதனிடையே, சிறை வார்டன்மூலம் கண்ணம்மாதான் பாரதியின் அப்பாவை கொலை செய்த குற்றத்திற்காக சிறை சென்றவர் என்ற உண்மையும் தெரியவர, பாரதி, கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்துகிறார். இதையடுத்து தன்மீதான குற்றச்சாட்டை 3 நாட்களில் நான் முறியடிக்கிறேன் என்று சபதமிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் கண்ணம்மா.

இந்நிலையில் உண்மையை நிருபிக்கும் வகையில் அவர் ஒருபக்கம் திரிந்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே, பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நிச்சயிக்கிறார் சவுந்தர்யா. கூடவே தன்னுடைய மகள் அஞ்சலி மற்றும் வெண்பாவின் அண்ணன் விஜய்க்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்த முடிவில் விருப்பம் இல்லாவிட்டாலும் கண்ணம்மா மீது கொண்ட வெறுப்பு காரணமாக திருமணத்திற்கு சம்மதிக்கிறார் பாரதி.
இந்நிலையில் தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரமோவில், வெண்பா -பாரதி, அஞ்சலி -விஜய் கல்யாணம் அவசர அவசரமாக கோயிலில் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டப் போவதாக காட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த திருமணத்தை எப்படி நிறுத்தி, தன்னுடைய வாழ்க்கையை கண்ணம்மா காப்பாற்றிக் கொள்ளப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











