Bharathi kannamma 2: பாரதியின் காதலை ஏற்றுக் கொள்ளும் கண்ணம்மா.. அந்த வார்த்தையை கேட்ட பாரதி!
சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடர்களின் வரிசையில் பாரதி கண்ணம்மா 2 தொடரும் தற்போது இடம் பெற்று வருகிறது.
முன்னதாக இந்தத் தொடரின் முதல் பாகம் பல மாதங்களாக முன்னணியில் இருந்த நிலையில், சீரியலில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடரை பின்னுக்கு தள்ளியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடர் நிறைவடைந்தது. சில தினங்களிலேயே தொடரின் இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது.
பாரதியின் காதலை ஏற்றுக் கொண்ட கண்ணம்மா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாரதி கண்ணம்மா 2. இந்தத் தொடரின் முதல் பாகம் வருடங்களை கடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடரில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி, தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வினுஷா கண்ணம்மாவாக மாற்றம் பெற்றார். தொடர்ந்து கதையின் போக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால் ரசிகர்கள் சலிப்படைந்தனர்.

இதனால் முன்னணியில் இருந்த இந்தத் தொடர், பின்னுக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து கதையில் பல்வேறு கதைக்களங்களை புகுத்தி சுவாரஸ்யமாக்க இயக்குநர் முயற்சி செய்தார். ஆனாலும் இந்தத் தொடர் டிஆர்பியில் முன்னணிக்கு வரவில்லை. இதையடுத்து கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடர் நிறைவு செய்யப்பட்டு, புதிய சீசன் சில தினங்களிலேயே துவங்கப்பட்டது. முற்றிலும் மாறுப்பட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் துவங்கப்பட்டது.
ஆனாலும் முதல் சீசனில் ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் அதிரடி மாற்றமாக பாரதியாக நடித்த அருண், இந்த சீசனில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ரோஜா தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த சிபு சூர்யன் பாரதியாக தற்போது நடித்து வருகிறார். ஊதாரியாக இருந்த இவர், கண்ணம்மாவுடனான காதலால் தற்போது சிறப்பானவராக மாறியுள்ளதாக அடுத்தடுத்து காட்டப்படுகிறது.
கண்ணம்மாவுடனான காதலை பாரதி, பிரபோஸ் செய்த நிலையில், தன்னுடைய தந்தை மற்றும் பாரதியின் அம்மா ஆகியோரை மனதில் வைத்து அவரது காதலை ஏற்காமல் கண்ணம்மா தட்டிக் கழித்து வந்தார். மேலும் தான் கண்ணம்மா இல்லை என்ற உண்மையையும் பாரதியிடம் அவர் கூறுகிறார். ஆனாலும் கண்ணம்மா மீதான தன்னுடைய காதல் உண்மையானது என்று கூறும் பாரதி, அவரிடம் தன்னுடைய காதலை தொடர்ந்து புரிய வைக்கிறார்.
இதனிடையே, பாரதியின் காதலை ஏற்கும் சந்தர்ப்பத்தை இயற்கையே ஏற்படுத்துகிறது. தன்னுடைய காதலை நிரூபிப்பதற்காக மழை பெய்ய வேண்டும் என்று பாரதி வேண்ட, உடனடியாக மழை பெய்கிறது. இதையடுத்து பாரதியின் காதலை தவிர்க்க முடியாமல் தவிக்கும் கண்ணம்மா, அவரது காதலை ஏற்கிறார். தொடர்ந்து இருவரும் ஆடல், பாடல் என கொண்டாட்டதில் ஈடுபடுகின்றனர். அந்த மூன்று வார்த்தையை கூறும்படி பாரதி கேட்க, உடனடியாக ஐ லவ் யூ என்று வெட்கத்துடன் கண்ணம்மா கத்தி கூறுவதாக தற்போதைய எபிசோட் காணப்படுகிறது.
இதனிடையே, பாரதியின் அம்மாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ள வெண்பா, பாரதியை திருமணம் செய்துக் கொண்டு, அவரது சொத்துக்கள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார். அவர்மீது மிகுந்த பரிவுடன் இருக்கும் சவுந்தர்யா, வெண்பாவின் சதித்திட்டத்திற்கு பலியாகி, பாரதியை அவருக்கு திருமணம் செய்து வைக்க உறுதி அளித்து விடுவாரோ என்றும் ரசிகர்கள் ஒருபக்கம் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











