Ameer -Pavani: என்னது பிரேக்கப்பா.. ஏங்க வதந்தி கிளப்புறீங்க.. கடுப்பான அமீர் -பாவனி ஜோடி!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி ஜோடி.

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே விலகினாலும் அதிகமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியிலேயே பாவனியிடம் தன்னுடைய காதலை அமீர் வெளிப்படுத்த நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல் அவர்களது வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் கூடியது.

Vijay TVs Bigboss famous Ameer and Pavani opens up about the rumours of their break up

பிரேக் அப் வதந்திகள் குறித்து மனம்திறந்த அமீர் மற்றும் பாவனி: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் துவக்கப் போட்டியாளராக களமிறங்கினார் பாவனி. சீரியல் நடிகையான இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவர் கண்ணீருடன் வெளிப்படுத்திய நிலையில், அனைவரும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த நடன இயக்குநர் அமீர், நிகழ்ச்சியில் நுழைந்தவுடன் தன்னுடைய காதலை பாவனியிடம் வெளிப்படுத்தினார்.

ஆனால் பாவனி அவரது காதலை ஏற்காத நிலையில், நிகழ்ச்சியின் இடையிலேயே இவர்கள் இருவரும் வெளியேறினர். ஆனாலும் தன்னுடைய காதலை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்தார் அமீர். இவரது காதலை ஏற்காமல் போக்கு காட்டி வந்தார் பாவனி. ஒரு கட்டத்தில் பாவனியும், அமீரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள், டைட்டிலை வென்றனர்.

இந்நிலையில் தற்போது பாவனியை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார் அமீர். இன்ஸ்டாகிராமில் இருவரும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். அவ்வப்போது போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இருவரும் இணைந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. தங்களது காதலை இருவரும் கூட்டாக அறிவித்த நிலையில் அடுத்த ஆண்டில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Vijay TVs Bigboss famous Ameer and Pavani opens up about the rumours of their break up

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பேசிய பாவனி, தான் சிங்கிள் என்று கூற, அமீர் மற்றும் பாவனி இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது இந்த விஷயம் குறித்து இருவரும் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர். தாங்கள் இருவரும் பிரேக் அப் செய்துக் கொண்டதாக பரவிவரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் தங்களது உறவு குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த காதலர் தினத்தில் தங்களது காதலை உறுதிப்படுத்தியது அமீர் -பாவனி ஜோடி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் துவக்கத்திலேயே தங்களுடைய காதலை தாங்கள் புரிந்துக் கொண்டதாகவும் துணிவு படத்தை தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதாகவும் அதை பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் பாவனி முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதனால்தான் ஒரு வருடம் இடைவெளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X