பிக் பாஸ் வீட்டை ஆளப்போகும் பெண் குரல்!.. அப்போ அந்த ஆண் குரல் அவ்ளோ தானா?
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் தன்னுடைய 7வது சீசனை துவங்கவுள்ளது. இதற்கான ப்ரமோக்கள் தற்போது களைகட்டி வருகின்றன.
கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். தற்போது அவருடைய ப்ரெசென்சில்தான் ப்ரமோ காணப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்திலிருந்து துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டை ஆளப்போகும் பெண் குரல்: விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களின் பேவரைட்டாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த 7வது சீசன் குறித்த ப்ரமோக்கள் தற்போது தொடர்ந்து விஜய் டிவியின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.
ஒரே வீட்டில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த வித்தியாசமான மனநிலைகளை கொண்டவர்கள் இருப்பதுதான் பிக்பாஸின் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஏற்படும் கோபம், பாசம், சண்டை, அடிதடி, விளையாட்டு, நையாண்டி, மனவருத்தங்கள் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சீசனிலும் ஆங்கர், மாடல் என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இணையவுள்ளனர்.
இதனிடையே கடந்த சீசன்களில் இல்லாதவகையில், இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான ப்ரமோவில் கமலும் வித்தியாசமான இரண்டு கெட்டப்புகளில் வந்து விவரித்தார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் லோகோ உள்ளிட்டவையும் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த சீசன் வரும் அக்டோபர் 2 அல்லது 8ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இரண்டு பிக்பாஸ் வீடுகள் தயாராகி வருகின்றன. இரண்டு பிக்பாஸ் வீடுகளில் போட்டியாளர்கள் இரண்டாக பிரிந்து முதலில் இருப்பார்கள் என்றும், பிறகு ஒன்றாக இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாகவும் ஓவியாவிடம் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தமுறை இரண்டு பிக்பாஸ் வீடுகளில் இரண்டு பிக்பாஸ்கள் இருப்பார்கள் என்றும் ஒரு பெண் பிக்பாசும் ஒரு ஆண் பிக்பாசும் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி ஆவர்த்தனம் செய்துவந்த பிக்பாசிற்கு போட்டியாக தற்போது பெண் பிக்பாஸ் இடம்பெற உள்ளது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











