Bigboss Season 7: பிக்பாஸ் 7ல் பங்கேற்கும் 10 போட்டியாளர்கள்.. போட்டி பலமாத்தான் இருக்கும் போல!

சென்னை: விஜய் டிவியின் கலக்கல் ஷோவானா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் வீடு இரண்டுபடும். ஆனால் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடே இரண்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். அவருக்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay TVs Bigboss season 7 shows 10 participants list released

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017ம் ஆண்டு முதல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் டிவியின் பிக்பாஸ். இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை துவங்கவுள்ளது. இதுகுறித்து கடந்த சில வாரங்களாக ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடர் பிரமோஷன்களில் சேனல் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். அவருக்கு இந்த நிகழ்ச்சிக்காக 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் வாழும் சூழலில் போட்டியாளர்களின் விருப்பம், வெறுப்புகள், ஆசைகள், பிரச்சினைகள், கோபதாபங்கள், சண்டைகள் போன்றவற்றை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றன.

போட்டியாளர்களின் இத்தகைய பண்புகளால் பிக்பாஸ் வீடே இரண்டாகிப் போகும் சம்பவங்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த சீசனில் மேலும் பரபரப்பு காத்திருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் வீடே இரண்டாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியின் பிரமோவில் இரண்டாக தோன்றி அறிவித்துள்ளார். இந்த இரு வீடுகளில் இரண்டாக பிரிந்து வசிக்கவுள்ள போட்டியாளர்கள், ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் இணைவதாக நிகழ்ச்சி காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக தொடர்ந்து 6 ஆண்டுகள் இருந்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனிலும் அதிரடியான பல நிகழ்வுகளால் ரசிகர்களை கவர காத்திருக்கிறது. அதற்கேற்றாற் போல இந்த சீசனில் பங்கேற்கவுள்ள 10 போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது, நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனாயா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது. பின்னணி பேசுபவர், மாடல், சின்னத்திரை பிரபலங்கள், நடிகர்கள் என இந்த லிஸ்ட்டில் பலதரப்பினரும் இணைந்துள்ள நிலையில் போட்டியின் விதிமுறைகளும் பலமாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை அதிகமான சுவாரஸ்யங்களுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X