BB 7 Contestant Pradeep: செகண்ட் சான்ஸ் கிடைக்குமா.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கதவைத்தட்டும் பிரதீப்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

நிகழ்ச்சியின் இந்த சீசனின் வீடு இரண்டுபட்ட நிலையில் இரண்டு வீட்டினரிடையே தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படுகிறது.
மேலும் கடந்த வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்பும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பிக்கும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளார்.

Vijay TVs Bigg boss 7 eliminated contestant Pradeep asked for second chance in the show

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் தன்னுடைய 7வது சீசனை துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் நிகழ்ச்சியிலிருந்து 7 பேர் வெளியேறியுள்ளனர். 6 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறினார். ஆனாலும் வைல்ட் கார்ட் மூலமாக 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தி நிறுத்தியுள்ளனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி: வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் தினேஷ், அர்ச்சனா ஆகியோர் அடுத்தடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவது இரு தரப்பினரிடையே ஏற்படும் மோதல்கள் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்களை கூட்டி வருகின்றன. இதனிடையே நேற்றைய தினம் பிக்பாஸ் கோர்ட்டில் வைத்து இரு தரப்பினரிடையே குற்றச்சாட்டுகளும் அதற்கான வாக்குவாதங்களும் நடத்தப்பட்டன.

எலிமினேட் செய்யப்பட்ட பிரதீப்: முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ஸ்டார் போட்டியாளராக வலம் வந்தார் பிரதீப். தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களுடனும் இவருக்கு பிணக்கு ஏற்பட்ட போதிலும் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் இவரது செயல்பாடுகள் அமைந்தன. குறிப்பாக இவர் பாடும் பாடல்களுக்கு என தனியாக ரசிகர்கள் வட்டம் காணப்பட்டது. இந்நிலையில் இவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு கடந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

பெண்கள் பாதுகாப்பு காரணமா?: இவரது எலிமினேஷனுக்கு கமல் சொன்ன காரணம் பெண்கள் பாதுகாப்பு என்ற நிலையில், கமல்ஹாசனும் இந்த விவகாரத்தில் விமர்சனங்களுக்கு உள்ளானார். அந்த வகையில் பிரதீப்பிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பாகுபாடின்றி சப்போர்ட் செய்ததை பார்க்க முடிந்தது. வெளியில் வந்தாலும் அவர் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இருந்து வந்தார். அவரை வைத்து கமலை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியாகியதையும் பார்க்க முடிந்தது.

2வது சான்ஸ் கேட்கும் பிரதீப்: இந்நிலையில் தற்போது பிரதீப் வெளியிட்டுள்ள பதிவில் மீண்டும் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு கேட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அவரது பதிவில் தனக்கு நல்ல விளையாட்டு தரப்படும் பட்சத்தில் சிறப்பான ஷோவை அளிக்க தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த முறை தனது ஆட்டம் மேலும் சிறப்பாக அமையும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் ஒரு படத்தின் இடைவெளி முடிந்து வேறு படத்தின் இரண்டாவது பாதியில் ரிவெஞ்ச் மோடில் தான் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். பார்த்து செய்ங்க என்றும் அவர் ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X