BB7 show: பூர்ணிமாவின் கணிப்பு.. 2வது ப்ரமோவில் ஆங்கர் கமல்ஹாசன் பேசிய விஷயம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்சசியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.
இன்றைய தினம் நிகழ்ச்சி 56வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன.

வீக் எண்ட் எபிசோடான இன்றைய தினம் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் எலிமினேஷன் போட்டியாளர்கள் குறித்து அறிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு அடுத்தடுத்து 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது- இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ம் தேதி மிகச்சிறப்பான வகையில் தன்னுடைய துவக்கத்தை பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆங்கராக சிறப்பித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த சீசனில் அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன்: பிக்பாஸ் என்றால் கமல்ஹாசன்தான் ஆங்கர் என்னும்வகையில் அவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியாளரையும் பாராட்டுவதிலாகட்டும், அவர்களது தவறுகளை நாசுக்காகவும் நேரடியாக சுட்டிக் காட்டுவதிலாகட்டும் கமல்தான் பெஸ்ட் என்னும்வகையில் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். அடிக்கடி போட்டியாளர்களுக்கு நோஸ்கட் கொடுப்பது, கலாய்ப்பது, நகைச்சுவையை பறக்க விடுவது என கமலுக்காகவே இந்த நிகழ்ச்சியை வாரயிறுதியில் பார்க்கும் ரசிகர்களும் காணப்படுகின்றனர்.
56வது நாளில் என்ட்ரி: அந்த வகையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 56வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி எபிசோட்களான நேற்றும் இன்றும் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். இன்றைய தினம் நிகழ்ச்சி 56வது நாளில் என்ட்ரியாகியுள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோவில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ள விஜய் வர்மாவை பார்க்க முடிகிறது.
வைல்ட் கார்ட் என்ட்ரி: விஜய் வர்மா வந்தவுடன் தன்னுடைய வேலையை துவங்கிவிட்டதாக கமல்ஹாசன் கமெண்ட் அடிக்கிறார். தொடர்ந்து தான் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும என்று கூறும் கமல்ஹாசன், எவிக்ஷன் நம்பர் 2வை அறவிக்க எத்தனிப்பதாக ப்ரமோவில் காணப்படுகிறது. அக்ஷயாவை மணி கைகாட்ட, ரவீனா பூர்ணிமாதான் எவிக்ட் ஆவார் என்று கூறுவதாக ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. மாயாவிற்கு பூர்ணிமா அதிகமாக சப்போர்ட் செய்வதை அவர் காரணமாக கூறுகிறார்.
எவிக்ஷன் குறித்து ஹவுஸ்மேட்ஸ்: தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அக்ஷயா, தான் அல்லது மணி எவிக்ட் ஆக வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இதையடுத்து பேசும் பூர்ணிமா தான் எவிக்ட் ஆவேன் என்று கருதுவதாக கூறுகிறார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், பூர்ணிமாவின் கணிப்பு எவ்வளவு என்று கூறுகிறார். இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது. இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ எவிக்ட் ஆகவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











