BB tamil 7: என் இடத்துக்கு வேணும்னா வந்துடுறீங்களா.. கூல் சுரேஷை கலாய்த்த கமல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்றைய தினம் 28வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி நாளான நேற்றும் இன்றும் தொடர்ந்து பல பஞ்சாயத்துக்களை தீர்த்து வருகிறார். சிலரை கலாய்த்தும் சிலருக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்.
இதுவரை இல்லாதவகையில் இந்த வாரத்தில் 2 எலிமினேஷன் உள்ளதாகவும் 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரவுள்ளதாகவும் ப்ரமோ மூலம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியின் 7வத சீசன் துவங்கப்பட்ட நிலையில் அனன்யா, விஜய் வர்மா என இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னால் நிகழ்ச்சியில் நீடிக்க முடியாது என்று கூறி வெளியேறினார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் 28வது நாள்: இதனிடையே தற்போது 28ம் நாளில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் இரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றின்மூலம் போட்டியில் நுழையவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ப்ரமோ மூலம் அறிவித்துள்ளார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இதில் சின்னத்திரை நடிகர்கள் விஜே அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பேச்சாளர் அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு துவங்கவுள்ள இன்றைய நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மற்றும் எலிமினேஷன் குறித்து ரசிகர்களுக்கு தெரியவரும். இதனிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்ற சில நிகழ்வுகளின் பஞ்சாயத்துக்களையும் கமல்ஹாசன் தீர்த்து வைத்ததை பார்க்க முடிந்தது.
கமல் கேள்வி: இதனிடையே, கடந்த சில தினங்களாக பல்வேறு டாஸ்க்குகள் நடைபெற்ற நிலையில் அதில் பிக்பாஸ் வீட்டிலிருந்து சிலர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றதை பார்க்க முடிந்தது. தற்போது வெளியாகியுள்ள இன்றைய 28ம் நாளுக்கான புதிய ப்ரமோவில் இதுகுறித்து ஆங்கர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், உடல்நிலை சரியில்லை சார், அதனால்தான் இந்த மைக்ரேஷனில் ஈடுபட்டேன் என்று கூறினார்.

கமலின் எச்சரிக்கை: ரொம்ப முடியவில்லை என்றால் தன்னுடைய இடத்திற்கு வேண்டுமானால் வந்து விடுகிறீர்களா என்று அவரை கமல்ஹாசன் கலாய்த்ததை இந்த ப்ரமோவில் பார்க்க முடிந்தது. ரவீனாவிடமும் கமல் கேள்வி எழுப்பிய நிலையில், மாயா அவரை கலாய்த்தார். இதையடுத்து பேசிய கமல்ஹாசன், விதிமுறைகளை ப்ரேக் செய்துக் கொண்டே இருக்க முடியாது என்றும் அதற்கான எச்சரிக்கைதான் இது என்றும் அடுத்தமுறை கரண்ட்கூட கட்டாகலாம் என்றும் கூறியதை தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இதையடுத்து சாப்பாடு விஷயம் போலவே அடுத்தடுத்து விதிமுறைகள் கடுமையாகலாம் என்பதை அவர் கோடிட்டு காட்டியதை உணர முடிந்தது.


Click it and Unblock the Notifications











