Bigg boss 7: தெனாவட்டா வந்து பிரேக்பாஸ்ட் கேட்குறீங்க.. கூல் சுரேஷிற்கு எதிராக ஏழரையை கூட்டிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது.

பிக்பாஸ் வீடு தற்போது இரண்டாகியுள்ளது. இதுகுறித்து முன்னதாகவே ப்ரமோஷன்களில் கூறப்பட்ட நிலையில், அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது 6வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நுழைந்துள்ளது. தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளுடன் தங்களுடைய பொழுதுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

Vijay TVs Bigg boss 7 show contestant Vichithra warns Cool Suresh and Pradeep

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பிரதீப்பை எச்சரித்த விசித்ரா: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக துவக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இவர்களை சிறப்பான முன்னுரையுடன் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களிடையே அறிமுகம் செய்து வைத்தார். இவர்களில் 6 பேர் இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

நித்தம் ஒரு பிரச்சினைகளுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் நாட்களை கழித்து வருகின்றனர். பிரதீப், கேப்டன் விஜய், விசித்ரா, ஜோவிகா போன்றவர்கள், அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களின் அதிரடியான பேச்சுக்கள் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறது. குறிப்பாக பிரதீப், விசித்ரா போன்றவர்களின் செயல்பாடுகள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு மிகவும் சிறப்பாக பங்களித்து வருகிறது.

நேற்றைய தினம் வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்து காரசாரமான விவாதத்தை மேற்கொண்டு, ரசிகர்களிடையே பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை வாங்கினார் விசித்ரா. தன்னுடைய படிப்பு குறித்து தன்னுடைய அம்மா சொன்னால் மட்டுமே தான் கேட்டுக் கொள்வேன் என்று விசித்ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார் ஜோவிகா. இவர்களின் இந்த அதிரடி விவாதத்தால் போட்டி களைகட்டியது.

இதனிடையே, இன்று காலையிலேயே அடுத்த அதிரடிக்கு தயாரானார் விசித்ரா. காலையில் லேட்டாக வந்து பிரேக்பாஸ்ட்டிற்கு சைட்டிஷ் எதுவும் இல்லையா என்று கேட்ட கூல் சுரேஷுக்கு சரியாக பதிலடி கொடுத்தார். அனைவரும் சாப்பிடுமபோது வராமல், லேட்டாக வந்து தெனாவட்டாக ப்ரேக்பாஸ்ட் கேட்குறீங்க என்று அவர் சரவெடியாக பதிலடி கொடுக்க, என்ன சொல்வது என்று தெரியாமல் கூல் சுரேஷ் முழித்ததை பார்க்க முடிந்தது.

முன்னதாக பிரதீப்பிடமும் தன்னுடைய காட்டத்தை விசித்ரா காட்டியிருந்தார். தொடர்ந்து அவர் கிறுக்குத்தனமாக தன்னிடம் பேசும்பட்சத்தில் கையில் கிடைப்பதை தூக்கி அடித்துவிட்டு ரெட் கார்ட் வாங்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டார். நான் அமைதியாக இருப்பது போலவே ரௌடியிசமும் செய்வேன் என்றும் மிரட்டலாக தெரிவித்தார். இதுபோல தான் அதிகமான பேரை அடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X