Bigg boss tamil 7: கருப்பு ஆடா கேப்டன் யுகேந்திரன்.. கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 20வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் அனன்யா எவிக்ட் ஆனார்.

தொடர்ந்து சில தினங்களிலேயே பவா செல்லதுரை போட்டியிலிருந்து விலகிய நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலை காணப்பட்டது.

Vijay TVs Bigg boss 7 show entered 20th day today and the 2nd promo about Kamal released

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் 20வது நாள்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 7வது சீசனை துவங்கி நடத்தி வருகிறது. இந்த நகிழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா எவிக்ட் ஆனார். தொடர்ந்து போட்டியிலிருந்து பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரத்தில் எலிமினேஷன் நடக்கவில்லை.

இந்தப் போட்டியில் முதல் வாரத்தில் கேப்டனாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார் விஜய். ஆனால் தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் அதிரடியாக இருந்தது. இரண்டாவது வாரத்தில் அவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இதேபோல மூன்று முறை அவர் வாங்கினால் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்று கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் அவர் எலிமினேட் ஆகியுள்ளார்.

கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த டாஸ்க்குகளை பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு கொடுத்து வந்தது. இதில் ஆக்சிஜன் எமர்ஜென்சி டாஸ்கில் சிலிண்டர்களை கைப்பற்றுவதற்காக போட்டியாளர்கள் அடிதடியில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. அந்த வகையில் போட்டியாளர் பிரதீப்பை, விஜய் பொத்தென கீழே அடித்தார். இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. பிரதீப் மருத்துவ உதவியை பெற்றதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அடுத்தடுத்த கமல்ஹாசனின் ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இதன்மூலம் தற்போது விஜய் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக வோட்டிங்கில் கடைசியாக இருந்தது அக்ஷயா மற்றும் வினுஷாதான். ஆனால் தன்னுடைய செயலால் தற்போது விஜய் எலிமினேட் ஆகியுள்ளார். இதனிடையே இந்த வாரம் கேப்டனாக இருந்த யுகேந்திரனின் செயல்பாடு குறித்தும் போட்டியில் கமல்ஹாசன் பேசினார்.

Vijay TVs Bigg boss 7 show entered 20th day today and the 2nd promo about Kamal released

முன்னதாக இந்த கேப்டன்சிமீது சக போட்டியாளர்களின் விமர்சனத்தையும் கமல் கேட்டறிந்தார். இதற்கு பதிலளித்த போட்டியாளர்கள், அக்ஷயாவிற்காக யுகேந்திரன் தங்களுடைய டீமிற்காக விளையாடியதாக பூர்ணிமா கூறினார். ஆனால் தங்களுடைய டீமிற்காகத்தான் யுகேந்திரன் விளையாடியதாகவும் கேனை எடுத்துவந்து தங்களுடைய டீமிற்கு கொடுக்க அவர் திட்டமிட்டதாகவும் நிக்சன் கூறினார். இதையடுத்து கருப்பு ஆடாக யுகேந்திரன் செயல்பட்டாரா என்று கமல் கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து தன்னிடம் இருந்த பாட்டிலை யுகேந்திரன் கொடுக்கவில்லை என்று பூர்ணிமா மற்றும் விஷ்ணு குற்றம் சாட்டியதையும் தற்போது வெளியாகியுள்ள இரண்டாது ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இதையடுத்து மறைமுகமாக போட்டிருந்த இந்த திட்டத்தில் அவர் எப்படி மாட்டிக் கொண்டார் என்பது குறித்தும் கமல்ஹாசன் பேசினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் என்ன மாதிரியாக பேசி முடிவெடுப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X