BB tamil 7: அடுத்த வார கேப்டன் யாரு.. ஒற்றைக்காலில் நின்ற போட்டியாளர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனின் 33வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.
18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வெளியேறிய நிலையில் 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்காக இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளாகியுள்ளது.

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனை துவங்கி ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. மொத்தமாக 100 நாட்கள் ஒரே வீட்டில் ஆண், பெண் பாகுபாடின்றி எந்த வித தொழிலநுட்ப வசதிகளும் இல்லாமல் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை விதியாக வைக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது.
18 போட்டியாளர்கள்: இந்த நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா என 4 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். மேலும் பவா செல்லதுரை தானே விருப்பப்பட்டு வெளியேறினார். 5 போட்டியாளர்கள் விலகிய நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக களைகட்டி வருகிறது.
கேப்டன் தேர்வுக்கான டாஸ்க்: கடந்த இரு வாரங்களாக பூர்ணிமா ரவி, இந்த நிகழ்ச்சியில் கேப்டனாக இருந்து வருகிறார். முன்னதாக யுகேந்திரன், சரவணன், விஜய் வர்மா ஆகியோர் போட்டியின் கேப்டன்களாக இருந்த நிலையில், இந்த சீசனின் முதல் பெண் கேப்டனாக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. கேப்டனாக இவரது செயல்பாடுகள், கடந்த வார இறுதியில் கமலின் பாராட்டுகளுக்கும் உள்ளாகின. இந்நிலையில் இன்றைய தினம் கேப்டன்சி தேர்வுக்காக ஹவுஸ்மேட்டை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் அறிவுறுத்தினார். இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஒற்றைக்காலில் நின்ற போட்டியாளர்கள்: இதில் மாயா, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்களை போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த நிலையில், அவர்களுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒரு காலை தூக்கி அதிக நேரம் அதே போஸில் நிற்பவர் அடுத்த வாரத்திற்கான கேப்டனாவார் என்று கூறப்பட்ட நிலையில், விசித்ரா, மாயா, கூல் சுரேஷ் ஆகியோர் ஒற்றை காலை தூக்கி நின்றனர். ஒரு கட்டத்தில் விசித்ரா இந்த டாஸ்க்கை செய்ய முடியாமல் காலை கீழே வைத்துவிட்டார். இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்த போட்டி: கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் இந்த டாஸ்கை தொடர்வதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்பட்டது. இந்த டாஸ்கில் இவர்கள் இருவரில் யார் வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கான கேப்டனாக ஆவார்கள் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் இருவருமே அதிகமான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்று வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரில் யார் கேப்டனாக மாறினாலும் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











