BB 7: பிரதீப்பிற்கு ரெட் கார்ட்.. லைன் கட்டிய போட்டியாளர்கள்.. கமலின் முடிவு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றைய தினம் 34வது நாளை எட்டியுள்ளது.

வாரயிறுதி நாளான இன்றைய தினம் எலிமினேஷன் உள்ள நிலையில் முன்னதாக வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த பேச்சாளர் அன்னபாரதி எலிமினேட் ஆகவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோக்கள் இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Vijay TVs Bigg boss 7 show entered 34th day and 3rd promo released

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 7வது சீசனை துவங்கியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி 34வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 5 போட்டியாளர்கள் இதுவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்துள்ளனர்.

ரெண்டாகிய பிக்பாஸ் வீடு: இந்த நிகழ்ச்சியில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் அடுத்தடுத்த போட்டியாளர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த முறை வீடு ரெண்டாகியுள்ள நிலையில் பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களிடையே பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து நிகழ்ந்தவண்ண்ம் உள்ளது. ரசிகர்களை கடந்த சில வாரங்களாக கவர்ந்து வரும் போட்டியாளர்களாக பிரதீப், விசித்ரா, ஜோவிகா, விஷ்ணு உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

பிரதீப்பின் மோசமான செயல்பாடு: இதனிடையே கடந்த சில தினங்களாக சக போட்டியாளர்களிடம் மிகவும் மோசமான செயல்பாட்டை செய்துவந்தார் பிரதீப். இவர் தொடர்ந்து சக போட்டியாளர்களிடம் சண்டை பிடிப்பதும் மோசமான கமெண்ட்களை செய்வதும் ஏட்டிக்கு போட்டியாக நடந்துக் கொள்வதும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று அடாவடியாக பேசுவதுமாக சக போட்டியளார்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கடுப்பேற்றி வந்தார்.

பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட்: இந்நிலையில் இன்றைய தினம் இவருக்கு எதிராக போட்டியாளர்கள் கொடி பிடித்ததை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் 34வது நாளான இன்று அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டது. இதில் பிரதீப்பிற்கு எதிராக போட்டியாளர்கள் மிகவும் அதிகமாக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள 3வது ப்ரமோவில் ப்ரதீப் இந்தப் போட்டியில் தொடரலாமா வேண்டாமா என்று போட்டியாளர்களிடம் கமல் கேட்டார். மேலும் ரெட் கார்ட்டை காட்டவும் கேட்டுக் கொண்டார்.

Vijay TVs Bigg boss 7 show entered 34th day and 3rd promo released

மிரட்டுவதாக புகார்: இதையடுத்து இந்தப் பிரமோவில் கேப்டன் பூர்ணிமா முதல் ஆளாக பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டை காட்டினார். தொடர்ந்து மாயா, ப்ராவோ, நிக்சன், ஜோவிகா, விஷ்ணு உள்ளிட்டவர்களும் ப்ரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் காட்டினர். குறிப்பாக தன்னை தற்போதும் அவர் மிரட்டுவதாக நிக்சன் தெரிவித்தார். இதனிடையே அர்ச்சனா, தினேஷ், விசித்ரா உள்ளிட்டவர்கள் பிரதீப்பிற்கு ஆதரவாக பேசினர். அவர் மிகச்சிறந்த போட்டியாளர் என விசித்ரா சர்ட்டிபிகேட் கொடுத்தார். ஆயினும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X