BB 7 Show: வாய் திறந்தா எல்லாமே காலி.. நீயா நானா.. அடித்துக் கொண்ட மணி -நிக்சன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 40வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதியே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோர்ட் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி விவாதங்களை மேற்கொண்டனர்.

Vijay TVs Bigg boss 7 show entered 40th day and the next to next promos released


பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியது. நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் ரசிகர்களுக்கு ஆங்கர் கமல்ஹாசன் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 40வது நாளை எட்டியுள்ளது. வழக்கம்போல இன்றைய தினமும் விஜய் டிவி அடுத்தடுத்த ப்ரமோக்களை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் கோர்ட் டாஸ்க்: தொடர்ந்து இன்றைய தினமும் பிக்பாஸ் கோர்ட் டாஸ்க் நடந்த நிலையில், இதில் போட்டியாளர்கள் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து காரசாரமாக விவாதித்ததை பார்க்க முடிந்தது. உள்ளாடை குறித்த கமெண்ட் உள்ளிட்டவற்றை போட்டியாளர்கள் இந்த கோர்ட் டாஸ்கில் விவாதித்தனர். தொடர்ந்து பூர்ணிமாவிடம் விஷ்ணு கூறியது குறித்து தெரிந்துக் கொள்வதில் என்ன ஆர்வம் என்று ஜோவிகா கோபத்துடன் கேட்டதையும் பார்க்க முடிந்தது.


நிக்சன் மீது மணி குற்றச்சாட்டு: ரவீனா வளர்ச்சிக்கு மணிதான் தடையாக இருப்பதாக நிக்சன் கோர்ட் டாஸ்கில் குற்றம் சாட்டியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது ப்ரமோவில் தான் ரவீனா வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டும் நிக்சன், ஐஸ்வர்யா வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மணி நேரடியாகவே கோர்ட் டாஸ்க்கில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து நிக்சனால் தன்னுடைய ஆட்டம் பாதிப்பதாக ஐஸ்வர்யா தன்னிடம் குறைபட்டுக் கொண்டதாகவும் மணி தெரிவித்தார்.

அடித்துக் கொண்ட மணி -நிக்சன்: இந்த வழக்கை போட்டியாளர் விஷ்ணு விசாரித்தார். இதையடுத்து மணி மற்றும் நிக்சன் இருவரிடையேயும் சண்டை மூண்டது. இதையடுத்து தானும் ஐஸ்வர்யாவும் அப்படித்தான் இருப்போம் என்று முன்னதாக மணி கூறியதாகவும் நிக்சன் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஐஸ்வர்யா மற்றும் நிக்சன் குறித்து, உண்மையை தான் வெளிப்படுத்தினால் அனைத்தும் காலியாகிவிடும் என்று மணி எச்சரிக்கை விடுப்பதும் 2வது ப்ரமோவில் காணப்பகிறது.


கேப்டன் மாயா மீது வழக்கு: இந்த வாரத்தில் மாயா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் போட்டி அடுத்தடுத்த காரசாரமான விவாதங்களுடன் களைகட்டி வருகிறது. அவர் தன்னை கவராத நபர்கள் என்று அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா என 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிய நிலையில், தற்போது மாயாவிற்கு எதிராக போட்டியாளர்கள் தினேஷ், அர்ச்சனா, நிக்சன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை பிராவோ விசாரித்ததை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X