BB 7 show: என்னையும் உங்களோட ப்ளேயரா சேர்த்துக்கிட்டதாக தோணுது.. கமலின் அதிரடி பேச்சு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 41வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், வீக் எண்ட் எபிசோடின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரத்தில் மாயா கேப்டனாக இந்த நிலையில் பல மோதல்கள், பிரச்சினைகள் வெடித்தன. இந்த விஷயத்தில் கமல்ஹாசன் எந்த மாதிரியான முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பாரப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 7வது சீசன் துவங்கியுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 41வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடின் அடுத்தடுத்த ப்ரபமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், அதுகுறித்து கமல் இந்த ப்ரமோக்களில் பேசியுள்ளார்.
வீக் எண்ட் எபிசோட்: பிரதீப்பால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மாயா உள்ளிட்ட குழுவினர் குற்றம் சாட்டி, அவர் எலிமினேஷனுக்கு காரணமாக அமைந்தனர். ஆனால் அதே விஷயங்களை அவர்கள் தொடர்ந்து செய்து வருவதாக ரசிகர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர். இதனிடையே இந்த வார வீக் எண்ட் எபிசோட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த ப்ரமோக்கள்: அதற்கேற்ப முன்னதாக வெளியான முதல் ப்ரமோவில் கலக்கலான தீபாவளி உடையுடன் வந்த ஆங்கர் கமல்ஹாசன், தீர விசாரிப்பதே மெய் என்று பேசியுள்ளார். இது தீர்ப்பு இல்லை என்றும் தீர்வு என்றும் கூறிய கமல்ஹாசன், தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே துர வேண்டும் என்பது உலக நியதி என்றும் குற்றம் சாட்டியவர்கள் மட்டும் யோக்கியமா என்ற கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும் என்றும் கூறியிருந்தார்.
மாலைக் கண்ணா என கமல் கேள்வி: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், மாயா மற்றும் குழுவினரை பார்த்து அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மையா என்று கேள்வி எழுப்புகிறார். உண்மையென்றால் இது ஏன் நடந்தது என்று வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்புகிறார். அதிகாரம் கையில் இருக்கும்போது அவர்கள் செய்ததையும் வீடியோமூலம் கேள்விக்குட்படுத்தியுள்ளார். ரெட் கார்ட் மஞ்சளாக தெரிந்தது என்றால் மாலைக் கண்ணா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதைக்கேட்டு மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் முழிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.
அதிரடி ப்ரமோக்கள்: கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கலாமே, அது அவர்களின் உரிமை தானே என்றும் அவர் கேட்டுள்ளார். அவர்கள் தன்னையும் அவர்களுடன் ப்ளேயராக சேர்த்துக் கொண்டதாக தெரிவதாகவும் கமல் இந்த ப்ரமோவில் கூறியுள்ளார். பிரதீப் விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ள கமல்ஹாசன், இன்றைய எபிசோடில் அதற்கான விளக்கங்களை அளிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தற்போதைய ப்ரமோ வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோட் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











