BB7: இவனுங்க எல்லாம் போற கேஸ்தான்.. விஷ்ணுவின் கருத்துக்கு தினேஷ் சொன்ன விஷயம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது.
கடந்த 6 சீசன்களையும் மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 7வது சீசன் 51வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. விரைவில் வைல்ட்கார்ட் என்ட்ரியாக மேலும் 3 பேர் நிகழ்ச்சியில் நுழையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். இவர்களுக்கு சிறப்பான அறிமுகத்தை கமல்ஹாசன் கொடுத்திருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நுழைந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு முன்னதாகவே கல்வி குறித்த விவாதம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களைகட்டியது. இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா, பிராவோ உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் நுழைந்தவுடன் நிகழ்ச்சி களைகட்டியது. நித்தம் ஒரு சர்ச்சைகளுடன் போட்டி ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது. முன்னதாக பிரதீப், விஜய் உள்ளிட்டவர்களின் எலிமினேஷனும் நிகழ்ச்சியை ரசிகர்களிடையே அதிகமான ரீச் பெற செய்தது.
பிரதீப் எலிமினேஷன்: இதனிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார் பிரதீப். இவரது எலிமினேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. கமல்ஹாசனும் கேள்விக்குட்படுத்தப் பட்டிருந்தார். அவர் தவறான முடிவு எடுத்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து பிரதீப் நிகழ்ச்சியில் மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது. பிரதீப்பும் இந்த விஷயத்தில் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடையே தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக மேலும் மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக போட்டியிலிருந்து வெளியேறிய அனன்யா, வினுஷா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் போட்டியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இன்றைய தினம் நிகழ்ச்சி 51வது நாளை எட்டியுள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த ப்ரமோக்கள்: தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் விஷ்ணு மற்றும் தினேஷ் பேசுவதாக அமைந்துள்ளது. அதில் மாயாவிற்கு போகவேண்டிய ஓட்டுக்கள் யாருக்கு போவது என்று தெரியாமல் சிதறியுள்ளதாக விஷ்ணு கூறுகிறார். ரவீனா, மணிசந்திரா உள்ளிட்டவர்கள் எல்லாம் போகிற கேஸ்தான் என்பதால் இவர்களை வெளியில் அனுப்பிவிட்டு வைல்ட் கார்ட் என்ட்ரிக்களை கொண்டுவந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயல்வதாகவும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார். இதை ஆமோதிப்பதாக தினேஷ் ரியாக்ட் செய்வதையும் இந்த ப்ரமோவில் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











