BB 7 show: நீதிமன்ற டாஸ்க்.. பூர்ணிமா -விசித்ரா இடையில் நடந்த காரசாரமான விவாதம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 39வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் பிரச்சினை நிகழ்ச்சியின் துவக்கம் முதலே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த பிரச்சினை அதிகமாகி வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தற்போது பிபி கோர்ட் மூலம் இருதரப்பினரை மோதவிட்டு காரசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டதை ப்ரமோக்கள் மூலம் அறிய முடிகிறது.

 Vijay TVs Bigg boss 7 show entered today 39th day and the BB court task happening

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது பிக்பாஸ். 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த சீசன் கடந்த மாதம் 1ம் தேதி முதல் துவங்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நிகழ்ச்சி 39வது நாளில் நடைபோட்டு வருகிறது. நிகழ்ச்சியில் இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர். 5 பேர் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆகியுள்ளனர்.

கேப்டனான மாயா: இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் மாயாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் ஸ்மால்பாஸ் போட்டியாளர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது- இந்நிலையில் அவரது கேப்டன் பொறுப்பின்கீழ் போட்டியாளர்களிடையே அதிகமான பிரச்சினைகள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. தினந்தோறும் அதிகமான சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. இதையடுத்து தன்னை கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்ய சக போட்டியாளர்கள் அனுமதிக்கவில்லை என்று அவர் பிக்பாசிடம் குறைபட்டுக் கொண்டதையும் இன்றைய ப்ரமோவில் பார்க்க முடிந்தது.

39வது நாள் எபிசோட்: இந்நிலையில் இன்றைய 39வது நாளின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இன்றைய டாஸ்கில் பிபி கோர்ட் அமைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே வாதங்கள் நடத்தப்பட்டன. முன்னதாக கன்பஷன் ரூமிற்கு அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து, யார்மீது அவர்கள் குற்றம் சாட்டவும் வழக்கு தொடரவும் விரும்புகிறார்கள் என்பது கேட்டறியப்பட்டது.

பிக்பாஸ் நீதிமன்ற டாஸ்க்: தற்போது வெளியாகியுள்ள ப்ரமோக்களில் பேசிய விசித்ரா, மாயா தன்னுடைய கேப்டன் பொறுப்பை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து பேசிய மாயா, தன்னுடைய பணியை செய்ய விடவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இது முடிந்தவுடன் கோர்ட் ரூமிற்கு சென்ற போட்டியாளர்கள், வழக்கு தொடுத்தவர் மற்றும் அதற்கு எதிரானவர்கள் என குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் காரசாரமான விவாதங்கள் ஏற்படுவதாக ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.

 Vijay TVs Bigg boss 7 show entered today 39th day and the BB court task happening

விசித்ரா மீது பூர்ணிமா குற்றச்சாட்டு: சமையலறையில் ஏபிசிடி கூட தெரியாத அர்ச்சனாவை ஷாப்பிங் டாஸ்கில் அனுப்பி மோசமான விளையாட்டை விசித்ரா ஆடியதாகவும் சாப்பாட்டு விஷயத்தில் அவர் இதுபோன்று வளையாடிவிட்டதாகவும் பூர்ணிமா குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய விசித்ரா, அர்ச்சனாவிடம் பிரச்சினையா அல்லது அவருக்கு சமையல் தெரியாதது பிரச்சினையா என கேள்வி எழுப்பினார். நாங்க எதற்காக உங்களை பழிவாங்க வேண்டும் என்றும் கேட்கிறார்.

சுவாரஸ்யமான நீதிமன்ற டாஸ்க்: தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்பாடுகள் அனைத்தும் பர்சனலாக இருப்பதாகவும் தன்னுடைய ஹவுஸ்மேட் அர்ச்சனாவிற்கு எதிராக பூர்ணிமா செயல்படுவதாகவும் இந்த ப்ரமோவில் விசித்ரா குற்றம் சாட்டுகிறார். இந்த வாக்குவாதத்தில் தினேஷும் பங்கேற்பதாக காட்டப்படுகிறது. இந்த காரசாரமான விவாதத்தில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X