BB7: என்னை எலிமினேட் செஞ்சுடுங்க சார்.. கூல் சுரேஷை கடுப்பேற்றிய டாஸ்க்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 44வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய நாளின் புதிய டாஸ்க் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Vijay TVs Bigg boss 7 show entered today 44th day and the first promo released

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 44வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

44வது நாளில் பிக்பாஸ் 7: இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 8 பேர் வெளியேறியுள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்துள்ளனர். நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் தினந்தோறும் வெளியாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோக்களும் சிறப்பாக களைகட்டி வருகின்றன. இந்த நிகழ்ச்சியின் 44வது நாளான இன்றைய ப்ரமோவும் இன்றைய புதிய டாஸ்க்கை சொல்வதாக அமைந்துள்ளது. சுமை தாங்கி என்ற இந்த டாஸ்க் அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது.

வித்தியாசமான டாஸ்க்: மேலும் இந்த டாஸ்க்கில் தோற்றால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என்று முன்னதாக பூர்ணிமா ரவி வாசித்தார். இதை கேட்டவுடன் விஷ்ணு, ஓ மை காட் என்று தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இந்த டாஸ்கில் மாயா, ப்ராவோ, பூர்ணிமா ரவி, நிக்சன் உள்ளிட்டவர்கள் மேற்கொள்வதாக இந்த ப்ரமோவில் அமைந்துள்ளது. குதிகாலில் பேலன்ஸ் செய்தபடி பலகையின் மேலே செங்கல்லை தலையால் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்று இந்த டாஸ்கில் கூறப்பட்டது.

மூடப்பட்ட பெட்ரூம்: இதை போட்டியாளர்கள் சிரமேற்கொண்டு செய்தனர். ஆனாலும் அதிகநேரம் அவர்களால் இதை பேலன்ஸ் செய்ய முடியவில்லை. இதையடுத்து தன்னை எலிமினேட் செய்துவிடும்படி கூல் சுரேஷ் கூறுகிறார். தொடர்ந்து பேசும் பிக்பாஸ், சிறிது நேரத்தில் பெட்ரூம் கதவுகள் மூடப்படும் என்று கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுவதாகவும் இந்த ப்ரமோவில் காணப்படுகிறது.


44வது நாளின் ப்ரமோ: பிக்பாஸ் நிகழ்ச்சி நித்தம் ஒரு வித்தியாசமான மற்றும் கடினமான டாஸ்க்குகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் டாஸ்க் சற்று கடினமானதாகவே அமைந்திருந்தது. இதை எதிர்கொள்ள போட்டியாளர்கள் அதிகமாகவே கஷ்டப்பட்டனர். அடுத்தடுத்து பூர்ணிமா ரவி, நிக்சன் உள்ளிட்டவர்கள் இந்த டாஸ்க்கை செய்ய முடியாமல் தோற்றதையும் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் பார்க்க முடிந்தது. பெட்ரூம் கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஹவுஸ்மேட்ஸ் எங்கே தூங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X