BB7 show: விசித்ரா பார்ட் 2வை பார்க்க போறீங்க.. என்ன இப்படி சொல்லிட்டாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதகளம் செய்து வருகிறது. இன்றைய தினம் நிகழ்ச்சி 47வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

வழக்கம்போல நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Vijay TVs Bigg boss 7 show entered today 47th day and the promos released

இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கிய நிலையில் இன்றைய தினம் 47வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் அதிகமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் இல்லாத போதிலும் களைகட்டி வருகிறது.

சர்ச்சைகளை ஏற்படுத்திய நட்பு: இந்த நிகழ்ச்சியில் இருந்து 8 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்ட் மூலமாக 5 பேர் நுழைந்துள்ள நிலையில் 15 போட்டிகாளர்களுடன் நிகழ்ச்சி தற்போது நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த வாரத்தில் ஐஷு போட்டியிலிருந்து எலிமினேட் ஆனார். முன்னதாக நிக்சனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐஷு வெளியேற்றப்பட்டார்.

நித்தம் ஒரு டாஸ்க்: இந்நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர தவறியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளதாகவும் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்துள்ள தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோரும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றனர்.

47வது நாள்: இந்நிலையில் இன்றைய தினம் 47வது நாளிற்கான அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில், இந்த வாரம் நிகழ்ச்சியில் அதிகமாக கவராத 2 போட்டியாளர்களை குறிப்பிட்டு காரணத்துடன் சொல்லுமாறு பிக்பாஸ் கூறுகிறார். இதையடுத்து அதிகமானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை கைக்காட்டினர். சரவணன் விக்ரம் கடந்த வாரத்தில் விசித்ராவை அதிகமாக பார்க்கவில்லை என்று கூறியபோது, அப்படியா என்று விசித்ரா ரியாக்ட் செய்தார்.

விசித்ராவின் பார்ட் 2: இதையடுத்து பேசிய விசித்ரா, போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து பர்சனலாக தன்னை அட்டாக் செய்துள்ளதாகவும் தொடர்ந்து விசித்ரா பார்ட் 2வை பார்க்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வித் அர்ச்சனா என்று அவரும் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் கூறுவதாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு நிகழ்வுகளில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய விசித்ரா தற்போது பார்ட் 2வில் தன்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X