BB7 show: வின்னர் யார்ன்னுகூட கேப்பீங்க போல இருக்கே.. விஷ்ணு கேள்விக்கு கமல் காமெடி!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ம் தேதி துவங்கி இன்றைய தினம் 55வது நாளை எட்டியுள்ளது.

வீக் எண்ட் எபிசோடான இன்றைய தினம் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியான நிலையில், பல விஷயங்கள் குறித்து ஆங்கர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Vijay TVs Bigg boss 7 show november 25th day episode promos released

இந்த வாரம் இரு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரிக்களாகவும் போட்டியாளர்கள் உள்ளே நுழையவுள்ளனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் சிறப்பான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டு இன்றைய தினம் 55வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆங்கராக வழிநடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த சீசனில் நிகழ்ச்சியை அவர் ஆங்கரிங் செய்வதற்கு அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த எலிமினேஷன்: இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து விஜய் வர்மா, பிரதீப் உள்ளிட்டவர்கள் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டனர். பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறிய நிலையில், இதுவரை நிகழ்ச்சியிலிருந்து 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். நிகழ்ச்சியில் இரு முறை இரண்டு போட்டியாளர்கள் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்: இந்நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்ச்சனா, விசித்ரா, மணி, பூர்ணிமா, மாயா, அக்ஷயா, பிராவோ, ரவீனா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் ஆர்ஜே பிராவோ மற்றும் அக்ஷயா இந்த வாரம் எலிமினேட் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் விசித்ராவின் பூகம்பம் டாஸ்க் கவனத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் இதுகுறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

விஷ்ணு கேள்விக்கு கமல் நகைச்சுவை: இரண்டாவது ப்ரமோவில் பேசியுள்ள கமல் நாமினேட் ஆனவர்களை இணைந்து உட்காரும்படி கூறுகிறார். தொடர்ந்து எத்தனை பேர் வெளியேறுகிறார்கள் மற்றும் எத்தனை பேர் வருகிறார்கள் என விஷ்ணு, கமலிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த கமல். வின்னர் யார்ன்னுகூட கேட்பீர்கள் போலிருக்கிறதே என்று அவரை கலாய்ப்பதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது. உடனே அனைத்தும் தெரியவேண்டுமென்றால் தன்னருகில் வந்தால் எல்லாம் தெரியும் என்றும் கூறுகிறார்.

எலிமினேஷன் குறித்து பேசிய போட்டியாளர்கள்: தொடர்ந்து யார் வெளியே போவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல் கேள்வி எழுப்ப, மாயா என்று பூர்ணிமா பதிலளிக்கிறார். தான் தான் வெளியேறுவேன் என்று பிராவோ கூறுகிறார். அக்ஷயாவும் இதுகுறித்து பேச, உங்கள் இஷ்டம் நான் என்ன சொல்வது என்று கூறும் கமல்ஹாசன் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் குறித்து அறிவிக்க தயாராவதாக தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X