BB7 show: நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கனும்.. பூர்ணிமாவை ஓபன் நாமினேட் செய்த மாயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் சிறப்பான வகையில் தொகுத்து வழங்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் 57வது எபிசோடில் நுழைந்துள்ளது.
பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 57வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் வாரயிறுதி நாட்கள் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா, பிராவோ உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் நுழைந்தார்கள். இவர்களின் என்ட்ரி நிகழ்ச்சியை மேலும் களைகட்டியது. இந்நிலையில் கடந்த வாரமும் விஜய் வர்மா மற்றும் அனன்யா வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர்.
பூகம்பம் டாஸ்க்: நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை செயல்படுத்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை களைகட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட பூகம்பம் டாஸ்க் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாரயிறுதி எபிசோடில் நடிகர் கமல்ஹாசனும் பேசியிருந்தார். இந்நிலையில் அடுத்தவார எலிமினேஷன் குறித்து தற்போது ஹவுஸ்மேட்ஸ் ஓபன் நாமினேஷன் செய்தனர். இதனால் இன்றைய நிகழ்ச்சி களைகட்டியது.
57வது நாள் எபிசோட்: இன்றைய எபிசோட் 57வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில்தான் போட்டியாளர்கள் ஓபன் நாமினேஷன் செய்தனர். இதில் துவக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ் ஓபன் நாமினேட் செய்வார்கள் என்று பிக்பாஸ் அறிவித்த நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது நாமினேஷனை பதிவு செய்தனர்.
பூர்ணிமாவிற்கு எதிராக மாயா: இதில் அதிகமான நாமினேஷன் விக்ரமிற்கு எதிராக பதிவானது. தொடர்ந்து அனன்யா இரண்டாவது இடத்தையும் பூர்ணிமாவிற்கு எதிராகவும் போட்டியாளர்கள் நாமினேஷனை பதிவு செய்தனர். தொடர்ந்து பூர்ணிமாவிற்கு எதிராக மாயா நாமினேட் செய்ததை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும் என்றும் மாயா கூறியதை இந்த ப்ரமோவில் பார்க்க முடிந்தது.
ரசிகர்கள் கமெண்ட்: பூர்ணிமாவும் மாயாவும் இந்த சீசனில் அதிகமான கவனத்தை பெற்றிருந்தனர். இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்ததையும் பார்க்க முடிந்தது. இவர்களின் இந்த நட்பு விமர்சனங்களையும் பெற்றது. இதனிடையே பூர்ணிமா விஷ்ணுவுடன் அதிகமாக பேசுவதால் அவரை மாயா பிரேக் செய்துவிட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒன்று நான் இருக்கனும் இல்லன்னா அவங்க இருக்கனும் என்று மாயா கூறியுள்ள நிலையில், நீங்கள் இருவருமே இருக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











