BB 7 Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்.. அட இவங்களா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் களமிறங்கியுள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 19வது நாளில் களமிறங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த டாஸ்க்குகளால் ரசிகர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் ஆக்சிஜன் டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கைப்பற்றும்வகையில் கடுமையாக உருண்டு புரண்டதை பார்க்க முடிந்தது.

Vijay TVs Bigg boss 7 shows this week elimination update

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷன் இவரா?: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை துவங்கி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி சிறப்பான துவக்கத்துடன் துவங்கிய நிலையில், இன்றைய தினம் நிகழ்ச்சி 19வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த முறை பிக் மற்றும் ஸ்மால் என இருவேறு வீடுகளை களமிறக்கியுள்ள நிலையில், இந்த வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்தான் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்த நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து பவா செல்லதுரையும் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருந்தார். அவரை சமாதானம் செய்யும் பிக்பாஸின் முயற்சி எடுபடவில்லை. இதையடுத்து அவர் வெளியேறிய நிலையில், கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த வாரத்தில் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா மற்றும் கானா பாலா ஆகியோர் நிகழ்ச்சியில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, இந்த வாரம் மாயா, நிக்சன், அக்ஷயா, மணிசந்திரா, விசித்ரா, விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா, வினுஷா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வினுஷாதான் இந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதி கண்ணம்மா சீரியல்மூலம் விஜய் டிவியில் நடிகையாக என்ட்ரி கொடுத்த வினுஷா, ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் தன்னுடைய ஃபேன் பேஸை இவர் மேலும் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.

Vijay TVs Bigg boss 7 shows this week elimination update

இந்நிலையில் வினுஷா இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் ரசகிர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதி கண்ணம்மா தொடர் வினுஷாவிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த சீரியல்களில் இவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X