Bigg boss 7 show: புஸ்ஸுன்னு ஆயிட்டாங்க.. ஹவுஸ்மேட்சுடன் பட்டாசை ஒப்பிட்ட போட்டியாளர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
நிகழ்ச்சி இன்றைய தினம் 43வது நாளில் அடிபோட்டு வருகிறது. இந்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் மாயா கேப்டனாக இருந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் அதிகமான பிரச்சினைகள் இருந்ததை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனையும் சிறப்பாக நடத்தி வருகிறது. வழக்கம்போல நிறை குறைகளுடன் இந்த நிகழ்ச்சி இருந்தாலும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக தொடர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் 43வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இந்த நிகழ்ச்சியில் தினந்தோறும் வெளியாகிவரும் ப்ரமோக்கள் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. நேற்றைய தினம் ஐஷு எலிமினேட் ஆனதையும் தொடர்ந்து நிக்சன் கதறி அழுததையும் பார்க்க முடிந்தது. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து பேசினாலே காதல்தானா, இவர்களால் ஐஷு தன்னிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் பேசவே இல்லை என்றும் அவர் ஒரு குழந்தை மாதிரி என்றும் நிக்சன் கூறினார்.
கேப்டன் தினேஷ்: தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே இந்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்று தினேஷ், இந்த வாரத்தின் கேப்டனாகியுள்ளார். தொடர்ந்து இன்றைய தினத்திற்கான டாஸ்க்கையும் அவர் படிப்பதாக தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.
கொளுத்திப் போடு பட்டாச டாஸ்க்: தீபாவளி பண்டிகையையொட்டி இன்றைய தினமும் அதையொட்டிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கொளுத்திப் போடு பட்டாச என்ற தற்போதைய டாஸ்க்கில் பெட்டியில் இருந்து ஒரு பட்டாசை எடுக்கும் போட்டியாளர்கள், அதை சக போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு காரணத்தையும் சொல்ல வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் புல்லட் பாமை எடுத்த விசித்ராவிடம், வெடிப்பது ஒரு இடத்தில் மற்றும் சிதறுவது மற்றொரு இடத்தில் என்று தினேஷ் கூறினார்.
பட்டாசுடன் ஒப்பிட்ட ஹவுஸ்மேட்ஸ்: இதையடுத்து சிரித்துக் கொண்டே, அந்த பட்டாசுடன் பூர்ணிமாவை ஒப்பிட்டார் விசித்ரா. இதையடுத்து மற்றொரு பட்டாசை எடுத்தார் மாயா. அந்த பட்டாசு பறந்து வெடிக்கும் என்று நினைத்தால் புஸ்ஸென்று ஊர்ந்து போகும் என்று தினேஷ் கூறிய நிலையில், அந்த பட்டாசுடன் அர்ச்சனாவை, மாயா ஒப்பிட்டார். அவரை தான் பெரிதாக நினைத்த நிலையில் அவர் புஸ்ஸென்று ஆனதாகவும் அதற்கான காரணத்தை மாயா விளக்கினார்.
தீபாவளி ஸ்பெஷல்: தொடர்ந்து நிக்சன், கூல் சுரேஷ் உள்ளிட்டவர்களும் இந்த பட்டாசுகளை எடுப்பதை இன்றைய இந்த முதல் ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழ், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களையும் இந்த ப்ரமோவில் பார்க்க முடிந்தது. அவர்கள் குறித்த விஷயங்களை அடுத்தடுத்த ப்ரமோக்களில் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நேற்றைய தினம் தீபாவளி ஸ்பெஷலாக நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டையில் கமல்ஹாசனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.


Click it and Unblock the Notifications











