BB tamil 7: வைல்ட் கார்ட் சுற்றில் என்ட்ரி கொடுக்கும் 5 பேர்.. முன்னதாகவே யூகித்த ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி முதல் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 26ம் நாளில் நுழைந்துள்ளது. தற்போது நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

Vijay TVs Bigg boss 7 shows wild card entries assumptions

இந்த நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் வைல்ட் கார்ட் சுற்று நிகழ இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழையவுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்து 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. கடந்த 1ம் தேதி இந்த சீசனின் துவக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். வழக்கமாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என்ற நடைமுறை இந்த சீசனில் முறியடிக்கப்பட்டது. குறைவான வாக்குகள் பெற்று முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆனார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி: தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தன்னால் தொடர முடியாது என்று கூறி பவா செல்லதுரை வெளியேறினார். கடந்த வாரத்தில் விஜய் எலிமினேட் ஆனார். பிரதீப்புடன் அடிதடியில் ஈடுபட்ட அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து கமல் எலிமினேட் செய்திருந்தார். இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி நடைபெறவுள்ளதாகவும் அதில் 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாகவும் ப்ரமோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் நிழல்கள்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோவில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவுள்ள 5 பேர்களின் நிழல்கள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த நிகழ்களை வைத்தே அவர்கள் யார் என்பதை ரசிகர்கள் யூகித்துள்ளனர். முன்னதாகவே ரசிகர்கள் கணித்தபடி கலக்கப் போவது யாரு புகழ் கானா பாலாவும், பேச்சாளர் அன்னபாரதியும் நிகழ்ச்சியில் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மதுரை முத்துவின் பட்டிமன்ற குழுவை சேர்ந்தவரான அன்னபாரதி முன்னதாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேறபதை உறுதி செய்துள்ளார்.

களைகட்டுமா பிக்பாஸ் 7: இதனிடையே, சீரியல் புகழ் அர்ச்சனாவும் இந்த நிகழ்ச்சியில் லைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவுள்ளதாக முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகளும் வைல்ட் கார்ட் சுற்று மூலம் நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆண் போட்டியாளர் விஜய் டிவியை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நுழைந்தால் பிக் பாஸ் வீடு மேலும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்தாளர் அவுட்.. பேச்சாளர் இன்: ஏற்கனவே எழுத்தாளர் பவா செல்லதுரை நிகழ்ச்சிக்கு வந்து சில நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார். இந்நிலையில் தற்போது பேச்சாளர் அன்ன பாரதியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களமிறக்க உள்ளனர். அவர் இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுப்பாரா அல்லது பவா செல்லதுரை போல வீட்டை பார்க்க கிளம்பி விடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X