Bigg boss tamil 8: மற்றவர்களை சார்ந்தே இருக்கிறாரா அன்ஷிதா.. இந்த வார நாமினேஷன் லிஸ்ட்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 ஷோ கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்கத்துடன் துவங்கியுள்ள நிலையில் இரு வாரங்களை இந்த நிகழ்ச்சி பூர்த்தி செய்துவிட்டு தற்போது 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரு வாரங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அர்ணவ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களின் வாரயிறுதி எபிசோட்களில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்ததை பார்க்க முடிந்தது. முதல் வாரத்துடன் ஒப்பிட்ட வகையில் கடந்த வாரத்தில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் சற்று மேம்பட்டுள்ளதாகவும் அவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம் என்றும் அவர் கூறியதை பார்க்க முடிந்தது.

television bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த 8வது சீசனில் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக பங்கேற்று வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அவரது புதிய ஹோஸ்ட்டிங்கில் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. ஆயினும் கமல்ஹாசனின் தொகுப்பை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் விமர்சிப்பதையும் பார்க்க முடிந்தது. கடந்த இரு வாரங்களாக வாரயிறுதி நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி களமிறங்கி போட்டியாளர்களை வறுத்தெடுத்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் வாரயிறுதி எபிசோட்களின் டிஆர்பி அதிகரித்ததையும் பார்க்க முடிந்தது.

அடுத்தடுத்த எலிமினேஷன்: கடந்த இரு வாரங்களில் இந்தநிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அர்ணவ் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளனர். நேற்றைய தினம் அர்ணவ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அவரை கட்டிப்பிடித்து அன்ஷிதா அழுததும் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களை அர்ணவ் கேவலமாக பேசியதையும் அதை விஜய் சேதுபதி கண்டித்ததையும் இந்த நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. முத்து, தர்ஷா குப்தா மற்றும் அர்ணவ் எலிமினேஷனுக்கான இறுதிப்பட்டியலில் இருந்த நிலையில், நிகழ்ச்சியில் குறைவான வாக்குகளை பெற்ற அர்ணவ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடையே தீபாவளியையொட்டி இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் நுழையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் எலிமினேட் ஆகியுள்ள அர்ணவின் முன்னாள் மனைவி திவ்யா, நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் அடக்கம். அர்ணவ் வெளியேறிய போதிலும் அன்ஷிதா மற்றும் திவ்யா இடையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த களேபரங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்போதே அடுத்தடுத்து பலரின் வெறுப்பிற்கு அன்ஷிதா உள்ளாகியுள்ள நிலையில், இத்தகைய சம்பவங்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாமினேஷன் பிராசஸ்: இதனிடையே வரும் வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் இன்றைய நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் பிரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய விஜே விஷால் ஜாக்குலினை நாமினேட் செய்துள்ளார். இவர் தர்ஷனாவை ஓவர்ஷேடோ செய்வதாக தனக்கு தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக பேசிய சத்யாவும் ஜாக்குலினையே கைக்காட்டியுள்ளார். ஜாக்குலின் தானாகவே அதிகமான விஷயங்களில் தலையிடுவதாக இவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக பேசிய ஆனந்தி, சவுந்தர்யாவை நாமினேட் செய்துள்ளார். டீமிற்காக அவர் இன்னும் எதையும் யோசிக்காததை போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அன்ஷிதாவை நாமினேட் செய்த ரஞ்சித்: அடுத்ததாக பேசிய ரஞ்சித், அன்ஷிதாவை நாமினேட் செய்துள்ளார். அவர் தொடர்ந்து ஒருவரை சார்ந்தே இயங்குவதாக தெரிவித்துள்ளார், ஜாக்குலினும் அன்ஷிதாவையே கைக்காட்டி, அவரது ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய சுனிதா சத்யாவின் ஆட்டத்தில் அதிகமான பங்கு தெரியவில்லை என்று அவரை நாமினேட் செய்துள்ளார். தொடர்ந்து அன்ஷிதாவும் சத்யாவையே நாமினேட் செய்ய, தொடர்ந்து பேசிய முத்து பவித்ரா ஜனனி பாதுகாப்பான கேமை ஆடுவதாக தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை நாமினேட் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X