BB8: இன்னமும் பூசி மொழுகித்தான் விளையாடிக்கிட்டு இருக்காங்க.. சாட்டையை சுழற்ற தயாரான விஜய் சேதுபதி!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் புதிய ஹோஸ்டிங்கில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து எவிக்ஷன்களை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, கடந்த வாரத்தில் தீபாவளி சிறப்பாக எலிமினேஷன் இல்லை என்று கூறி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார். வாரயிறுதி நிகழ்ச்சிக்கான பிரமோவில் பேசிய விஜய் சேதுபதி இதுகுறித்து கேட்டுள்ளார். இந்த பிரமோவை வைத்து பார்க்கும் போது இன்றைய எபிசோட் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாட்டையை சுழற்ற விஜய் சேதுபதி மீண்டும் தயாராகியுள்ளார். அதை பார்க்க ரசிகர்களும் தயார்தான்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து ஏழு சீசன்களாக களைக்கட்டி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் களமிறங்கி நடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதிது ஆட்டமும் புதிது என்று தோள்தட்டி களமிறங்கியுள்ளார் புதிய ஹோஸ்ட் நடிகர் விஜய் சேதுபதி. அவரது ஹோஸ்டிங்கில் இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் வாரயிறுதி நாளில் அவர் போட்டியாளர்களை சந்திக்க உள்ள நிலையில் அதற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்களை அவர் அதிரடியாக சந்திக்க தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.
2 எலிமினேஷன்?: கடந்த வாரத்தில் தீபாவளி ஸ்பெஷலாக இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்று என்று விஜய் சேதுபதி அறிவித்து போட்டியாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்பிரைஸ் கொடுத்திருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதையடுத்து இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான நாமினேஷன் பிராசஸ் நிறைவடைந்து 11 பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில், சுனிதா மற்றும் ஆர்ஜே ஆனந்தி குறைவான வாக்குகளை பெற்றுள்ள நிலையில், இவர்கள் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள்: இவர்களில் ஆனந்தி ஸ்ட்ராங்கான போட்டியாளராக உள்ள நிலையில், சாச்சனா வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் பேசியுள்ள விஜய் சேதுபதி, வைல்ட் கார்டு என்ட்ரியாக போடடியில் நுழைந்துள்ளவர்களால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடியுள்ளதா என்றால் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனாதான் டைட்டிலை வெற்றி கொண்டார். ஆனால் தற்போது நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ள வைல்ட் போட்டியாளர்கள் யாரும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை.
விஜய் சேதுபதி கேள்வி: இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் தொடர்ந்து பேசியுள்ள விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் கதையை கேட்டபின்பு அவர்கள் மீதான பார்வை மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். உண்மையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் தொடர்ந்து போட்டியாளர்கள் பூசி மொழுகி விளையாடி வருவதாக கூறியுள்ள அவர், அவர்களை உண்மையாக விளையாட வைக்க மொட்டை கடுதாசி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதியின் நேரடியான தாக்குதல்களில் போட்டியாளர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











