Bigg boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த கேப்டன்.. கொளுத்திப்போட்ட மாயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது 7வது சீசனில் இந்த நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் இந்த நிகிழ்ச்சி துவங்கியது.
இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 9வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் போட்டியிலிருந்து இரு போட்டியாளர்கள் விலகியுள்ளனர்.

9வது நாளில் களமிறங்கிய பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், கடந்த வாரத்தில் அனன்யா போட்டியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நிகழ்ச்சியின் போட்டியாளர் பவா செல்லதுரையும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
போட்டியில் அதிகமான பிரபலங்கள் யாரும் இணையாத நிலையிலும் நிகழ்ச்சியின் துவக்கம் முதலே அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. ஒவ்வொரு போட்டியாளரும் போட்டி, பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் விஜய் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர் விக்ரம் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.
ஆனால் அவர், சக போட்டியாளர்களை சந்திக்கும் திறமை இல்லாமல் திணறி வருவதாக கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் நிகழ்ச்சி 9வது நாளில் நுழைந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரமோ சில மணிநேரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இதில் பிக்பாஸ் வீட்டிற்கும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் இடையில் சாப்பாட்டு விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. இதை சமாளிக்கும் வழி தெரியாமல் கேப்டன் விக்ரம் திணறியதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், அடுத்த வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து கேப்டன் தேர்வாக வேண்டும் என்று நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோவில் மாயா கூறுவதாக அமைந்துள்ளது. ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் கேப்டனானால் அது வேறு கேம் என்றும் அவர் சக போட்டியாளர்களிடம் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் மெஜாரிட்டி அதிகமாக இருப்பதாக சக போட்டியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்வாறு இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரமோ அமைந்துள்ளது.

இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி 9வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த சில தினங்களிலேயே, விசித்ரா, ப்ரதீப் இடையிலான பிரச்சினை, கேப்டன் விஜய் -பிரதீப் இடையிலான பிரச்சினைகள், விசித்ரா -ஜோவிகா இடையிலான வாக்குவாதங்கள் என நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியில் சக போட்டியாளரை தரக்குறைவாக பேசியதாக விஜய்க்கு நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன், ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











