Bigg boss season 7 show: என்னது இப்போதைக்கு ஒண்ணுதானா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த ட்விஸ்ட்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ளது.

இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான வகையில் துவங்கவுள்ளது. இதற்கான களங்கள் தயாராகவுள்ளன.

Vijay TVs Bigg boss season 7 show starts today with big oepning

இந்த முறை ஒன்றில்லை இரண்டு வீடுகள் என்று ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக துவக்கம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஆறு சீசன்களை சிறப்பான வகையில் நிறைவு செய்துள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப் படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதுபோன்ற வாழ்க்கையைத்தான் நாமெல்லாம் வாழ்ந்தோம் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

தற்போது பக்கத்து வீட்டினரிடம் மட்டுமில்லாமல் குடும்பத்தினரிடமும் பேச சந்தர்ப்பம் இல்லாத சூழ்நிலைக்கு தொழில்நுட்ப வசதிகள் நம்மை தள்ளியுள்ளன. அந்த வகையில் நமக்குள் இருக்கும் இத்தகைய வாழ்க்கைக்கான ஏக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது. இன்று மாலை இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் துவக்கி வைக்கவுள்ளார்.

Vijay TVs Bigg boss season 7 show starts today with big oepning

கடந்த சில தினங்களாகவே இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், நிகழ்ச்சியில் இந்த சீசனில் 2 பிக்பாஸ் வீடுகள் என்றும், வீடே இரண்டுபட்டால் என்னாகும் என்பது போன்ற ப்ரமோக்கள் ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளன. கமல்ஹாசன் இரண்டு கெட்டப்புகளில் இந்த ப்ரமோக்களில் தோன்றி அடுத்தடுத்த ப்ரமோக்களை வெளியிட்டு அதிரடி கிளப்பினார்.

பிக்பாஸ் சீசன் 7க்கான இரண்டு பிக்பாஸ் வீடுகள் தயார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஒன்றுதான் என்று கூறப்படுகிறது. இன்று மாலை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கவுள்ள நிலையில், இதுகுறித்த தெளிவு கிடைக்கும். தற்போதைக்கு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழையவுள்ளனர். அடுத்ததாக வைல்ட்கார்ட் சுற்றில் அடுத்த இரு போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் வீட்டில் கோபம், சந்தோஷம், பிரச்சினை, அடிதடி, சண்டை, மனஸ்தாபம், காதல் என அனைத்தையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் அமீர் -பாவனி ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். இந்த சீசனில் அதுபோல ரசிகர்கள் யார் கவர்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளன. தொடர்ந்து 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அவருக்கு இந்த சீசனில் 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X