பிக் பாஸ் கேம் ஆட வந்திருக்காங்களா?.. இல்லை.. முதல் வாரத்திலேயே சாட்டையை சுழற்றிய விஜய் சேதுபதி!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியது. இதில் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. முதல் நாளிலேயே அவரது நடை, உடை, பாவனைகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
பிக்பாஸ் 8 துவக்க விழாவில் 18 போட்டியாளர்களையும் மிகவும் சுவாரசியமாகவும் அதே நேரத்தில் அவர்களது நிறை குறைகளை சுட்டிக்காட்டும் வகையிலும் பேசி பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இன்றைய தினம் வாரயிறுதி நாளில் அவர் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்கவுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 8: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், கடந்த 6ம் தேதி சிறப்பான துவக்க விழாவுடன் தன்னுடைய 8வது சீசனை துவங்கியது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஸ்மார்ட்டாக ஒரு நாள் தாடியுடன் இவரை இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்டாக பார்க்க முடிகிறது. கடந்த 6ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் 18 போட்டியாளர்களை அவர்களின் நிறை குறைகளை மிகவும் நகைச்சுவையுடனும் அதே நேரத்தில் போல்டாகவும் அணுகினார் விஜய் சேதுபதி.
ஹோஸ்ட் விஜய் சேதுபதி: முதல் நாளில் அறிமுகத்துடன் மட்டுமே அவருடைய பேச்சை நிறுத்திக் கொண்ட நிலையில் வாரயிறுதி நாட்களான இன்றும் நாளையும் அவர் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் சந்திக்கவுள்ளார். இதற்கான முதல் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கத்தில் ரசிகர்களின் கைதட்டல்களுக்கு இடையில் மிகவும் கம்பீரமான லுக்கில் அழகாக நடந்து வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து வணக்கத்துடன் பேசிய அவர், கப்புதான் முக்கியம் என்று கூறிவிட்டு உள்ளே சென்ற போட்டியாளர்கள் பெட்டிற்கு சண்டை போட்டுக் கொள்வதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
சாட்டையை சுழற்றிய விஜய் சேதுபதி: கோட்டை போட்டு கேமை ஆட சொன்னால், நான் உப்பு தருகிறேன், தண்ணீர் தருகிறாயா, கரம் மசாலா இருக்கா கொத்தமல்லி கட்டைக் காணோம் என்பதாக குற்றம் கூறுவதாக கூறியுள்ள விஜய் சேதுபதி, இவர்கள் கேம் ஆட சென்றிருக்கிறார்களா அல்லது ஏதாவது டூருக்கு சென்றிருக்கிறார்களா என்று தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அவர்களின் பஞ்சாயத்து என்ன என்பதை பேசி முடித்துவிடுவோம் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. ஏற்கனவே அடிதடி சண்டை போடுமளவிற்கு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துக் கொள்ளும்நிலையில் விஜய் சேதுபதி அதை மேலும் ஏற்றிவிடுவாரோ என்ற சந்தேகம் தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய ஏழு சீசன்களை சிறப்பாக அணுகினார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் நிகழ்ச்சி ஒரே மாதிரியாக செல்வதாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் கடந்த ஏழாவது சீசனில் கமல்ஹாசன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த 8வது சீசனில் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. அவரது புதிய ஹோஸ்டிங்கில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய ப்ரொமோஷனாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அதிரடியாக பேசுவார் என்பது தற்போது வெளியாகியுள்ள பிரமோ மூலமாகவே தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











