BB tamil 7: நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. எச்சரித்த கமல்ஹாசன்!
சென்னை: விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 7வது சீசனை கடந்த 1ம் தேதி துவங்கி தற்போது 21வது நாளில் நுழைந்துள்ளது.
முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேஷன் ஆன நிலையில், அடுத்ததாக பவா செல்லதுரை தானே வெளியேறினார்.

இதனிடையே இந்த வாரத்தில் விஜய் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக இவரது அதிரடி நடவடிக்கைகளால் பிரதீப் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூல் சுரேஷிற்கு எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது. தற்போது 6 சீசன்களை சிறப்பான நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி 7வது சீசனில் வெற்றிகரமான நுழைந்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 21ம் நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேஷன் ஆன நிலையில், பவா செல்லதுரையும் உடல்நிலையை காரணம் காட்டி வெளியேறினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த டாஸ்க்குகளால் இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களைகட்டி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் எமர்ஜென்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் சிலிண்டர்களை கைப்பற்றும் முயற்சியில் போட்டியாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் விஜய் மற்றும் பிரதீப் இடையில் சண்டை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. பிரதீப்பை விஜய் தூக்கி வீசினார்.
இதில் பிரதீப் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் விஜய் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக எவிக்ஷன் லிஸ்ட்டில் வினுஷா மற்றும் அக்ஷயா இருந்த நிலையில், தன்னுடைய மோசமான செயல்பாட்டால், விஜய் எலிமினேட் ஆகியுள்ளார்.இதனிடையே யுகேந்திரன் கேப்டன்ஷிப், கூல் சுரேஷ் செயல்பாடு ஆகியவை குறித்தும் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். நிகழ்ச்சி இன்றைய தினம் 21ம் நாளை எட்டியுள்ள நிலையில் இதன் 2வது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கூல் சுரேஷ் காமெடிக்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.
இதில், தான் யோசிக்காமல் காமெடி செய்வதாகவும் ஆனால் தவறு என்று கூறப்பட்டால் தான் தொடர மாட்டேன் என்று கூல் சுரேஷ் கூறியதாக நிக்சன் கூறினார். தொடர்ந்து விசித்ராவோ, கூல் சுரேஷ் ஒரே மாதிரியான செய்கைகளை தொடர்வதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய கமல்ஹாசன், மற்றவர்கள் கொடுக்காத சுதந்திரத்தை கூல் சுரேஷ் பயன்படுத்துவதை சுட்டிக் காட்டினார். மேலும் தனக்கு எல்லாமே கேட்கும் என்றும் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தற்போதைய ப்ரமோவில் கூல் சுரேஷிற்கு கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 1ம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் 21ம் நாளில் களமிறங்கியுள்ளது. முதல் நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. பல்வேறு விவாதங்கள், பிரச்சினைகள், அடிதடிகள், வாக்குவாதங்கள் என அடுத்தடுத்த நிகழ்வுகளை தினந்தோறும் கண்டு வருகிறது. ஆக்சிஜன் டாஸ்க்கில் நடைபெற்ற அடிதடியில் விஜய் தன்னுடைய நிதானத்தை இழந்து பிரதீப்பை தூக்கி அடித்ததையும் பார்க்க முடிந்தது. முன்னதாக அவர் ஸ்ட்ரைக் கார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











