BB tamil 7 show: படிச்சிட்டுதான் வாழனும்னு அவசியம் இல்லை.. விசித்ராவிடம் ஆத்திரப்பட்ட ஜோவிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி தற்போது 5வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

Vijay TVs Bigg boss tamil 7 show 5th day 4th promo released

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் ஜோவிகா கோபம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் சீசனை துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அவரது தொகுப்பில் நிகழ்ச்சி 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அனைவரையும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே தலைவர் கேப்டன் விஜய்யை சரியாக இம்ப்ரஸ் செய்யாத 6 போட்டியாளர்கள் இந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே முதல் நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கிடையில் போட்டி, சவால்கள், பிரச்சினைகள், நையாண்டிகள், கேலி, கிண்டல் என களைகட்டியது. முன்னதாக கேப்டன் விஜய் மற்றும் பிரதிப் இடையில் சாப்பாட்டு விஷயத்தில் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து பெண்கள் விஷயத்தில் பிரதீப்பின் நிலைப்பாடு குறித்த உண்மை முகம் வெளிப்பட்டது. இதனால் நிகழ்ச்சியின் பெண் போட்டியாளர்கள் மிகுந்த கடுப்பாகினர்.

இதனிடையே விசித்ராவுடன் ஒரே படுக்கையில் தூங்க வேண்டும் என்று பிரதீப் கூறியதும் சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் உடை குறித்த விசித்ராவின் நிலைப்பாடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், வனிதாவின் மகள் ஜோவிகாவின் இடைநிற்றல் கல்வி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகிறார் விசித்ரா. அவர் அடிப்படை கல்வியை பெற வேண்டிய அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 5வது நாளான இன்று தொடர்ந்து வெளியிடப்பட்ட 2, 3 மற்றும் 4வது ப்ரமோக்களில் இவர்களின் பஞ்சாயத்தே பிரதானமாக இருந்தது. தான் படிக்காதது குறித்த விசித்ராவின் விமர்சனங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார் ஜோவிகா. இவ்வளவு இளம் வயதில் அவருக்கு ஏற்படும் ஆத்திரம், வனிதா விஜயகுமாரின் மகள் என்பதை வெளிப்படுத்துவதாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 4வது ப்ரமோவில், விசித்ராவிடம் ஜோவிகா அதிகமாக ஆத்திரப்படுவதாக அமைந்துள்ளது.

தமிழ் எழுதுமாறு விசித்ரா ஜோவிகாவிடம் கூறுகிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்படும் ஜோவிகா, என்னால முடியவில்லை என்பதால்தான் அதைவிட்டேன் என்று கூறுகிறார். ஒரு விஷயத்தை செய்யும்போது மோசமான மனநிலை ஏற்படும் பட்சத்தில் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் விசித்ராவிடம் கோபமாக பேசுகிறார். மேலும் படித்துவிட்டுதான் ஒருவர் வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் தொடர்ந்து பேசுவதாக 4வது ப்ரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X