BB tamil 7 show: விசித்ராவை ஒருமையில் பேசிய ஜோவிகா.. தொடரும் பிக்பாஸ் பஞ்சாயத்து!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.
தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் விசித்ரா -ஜோவிகா பஞ்சாயத்து: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 6 ஆண்டுகள் வெற்றிகரமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது சீசனிலும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களுக்கு சிறப்பான முன்னோட்டத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகைகள், யூடியூபர்கள், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இணைந்துள்ளனர். மேலும் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றிலும் சிலர் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாதவகையில், இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் வடிவமைக்கப்பட்டு, 6 பேர் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் கேப்டனை அதிகமாக கவராத நிலையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிக்பாஸ் ஷோ 5வது நாளை எட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டியாளர்களின் சண்டைகள், விவாதங்கள், பிரச்சினைகள், சவால்கள் என சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் தலைவர் கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையில் முதல் நாளிலேயே சாப்பாட்டிற்காக பிரச்சினை தலைதூக்கியது. தொடர்ந்து மேக்கப் விஷயத்தில் வைக்கப்பட்ட டாஸ்கில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் பிரதீப்.
இந்த நிகழ்ச்சியில் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக மாறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. அவர் தனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றும் 9வது வகுப்போடு தான் படிப்பை நிறுத்திவிட்டதாகவும் நடிப்பதில் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் தங்களது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவரும் இந்தத் துறையில் உள்ளதை பார்த்து வளர்ந்ததால் தனக்கும் நடிப்பில் அதிக ஆர்வம் இயல்பாகவே வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜோவிகா அடிப்படை கல்வியை முடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சியின் சக போட்டியாளரும் நடிகையுமான விசித்ரா கூறியிருந்தார். இதுகுறித்து பேச விரும்பவில்லை என்று ஜோவிகா முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியில் இந்த விஷயம் குறித்து இருவரும் விவாதம் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் பேசிய விசித்ரா, அனைவரும் டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ ஆகவேண்டும் என்று தான் கூறவே இல்லை என்று பேசுகிறார். இதைக்கேட்டு கடுப்பான ஜோவிகா, அடிப்படையாக 12ம் வகுப்பு படிக்க வேண்டும் என்று தன்னை குறிப்பிட்டு விசித்ரா பேசியதாக கோபத்துடன் கூறுகிறார். இதில் என்ன தவறு, உன்னுடைய அம்மா சொல்வதில்லையா என்று விசித்ரா கேட்க, எங்களின் குடும்ப பிரச்சினைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாது என்று ஜோவிகா கோபத்துடன் பேசுகிறார்.
என்னுடைய அம்மா சொன்னால் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் இந்த ஷோவிற்கு நான்தான் வந்துள்ளேன். என்னுடைய தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா யாரும் வரவில்லை. அதனால் என்னை பற்றி பேசுவதென்றால் பேசு என்று ஒருகட்டத்தில் ஒருமையில் ஜோவிகா பேசத்துவங்கினார். தன்னுடைய பேக்கிரவுண்ட் பற்றி பேசாதே என்றும் மிகுந்த எரிச்சலுடன் ஜோவிகா பேசிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதாக மூன்றாவது ப்ரமோவில் காணப்படுகிறது. இவர்களின் விவாதத்திற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் முழிப்பதாகவும் இந்த ப்ரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











