BB 7: சரிடா.. சமைக்கறதாலத்தான் இந்த வீட்ல இருக்குறே.. பிரதீப்பிடம் மல்லுகட்டிய ஜோவிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது.

நிகழ்ச்சியில் களமிறங்கிய 18 போட்டியாளர்களை சிறப்பான முன்னுரையுடன் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது 11வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சியிலிருந்து அனன்யா எலிமினேட் ஆன நிலையில், பவா செல்லதுரையும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 11th day and next to next promos released

சமையல் விவகாரத்தில் பிரதீப்பை சரமாரியாக திட்டிய ஜோவிகா: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழா நிகழ்ச்சியுடன் துவங்கிய நிலையில், நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களை சிறப்பான முன்னுரையுடன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார் ஆங்கர் கமல்ஹாசன். தொடர்ந்து இன்றைய தினம் 11வது நாளில் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது. நித்தம் ஒரு பிரச்சினைகளை போட்டியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கல்வியின் அவசியம் குறித்து ஜோவிகாவுடன் மல்லுக்கு நின்றார் விசித்ரா. தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகள், சவால்கள், போட்டிகள் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இதனிடையே இன்றைய 11வது நாள் நிகழ்ச்சியில், சமைக்க மாட்டோம் என்று ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் மல்லுக்கு நின்றதையும் முதல் ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பிரதீப்புடன் இந்த சமையல் விவகாரத்தில் மல்லுகட்டுகிறார் ஜோவிகா.

6 பேர் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருக்கும்போது குறை கூறுகிறீர்கள் என்று பிரதீப், ஜோவிகாவிடம் கேட்க, மூன்று வேளை எவ்வளவு வேண்டுமென்றாலும் சமைக்க வேண்டும், அதுதான் உன்னுடைய வேலை என்று ஜோவிகா கூறுகிறார். அதற்காக அடிமை போல நடத்துவாயா என்று பிரதீப் மீண்டும் கேட்கிறார். இதனால் அவர்களிடையே சண்டை முற்றுகிறது. இதையடுத்து ஒருமையில் பேசத் துவங்குகிறார் ஜோவிகா.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 11th day and next to next promos released

சரிடா, என்னுடைய சாப்பாட்டை நான் வேஸ்ட் செய்வதாகவே இருந்தாலும் சமைக்க மாட்டேன் என்று ஏன் கூறுகிறாய் என்று காட்டமாக கேட்கிறார் ஜோவிகா. சமைப்பதுதான் உன்னுடைய வேலை என்றும் அதனால்தான் இந்த வீட்டில் இருக்கிறாய் என்றும் ஜோவிகா கூற, கடுப்பானாலும் சமாளித்துக் கொண்டு கண்டென்ட் கொடுத்தீர்களா என்று பிரதீப் கேட்கிறார். அது அவருடைய பிரச்சினை இல்லை என்று தொடர்ந்து மல்லுக்கு நிற்கிறார் ஜோவிகா.

முன்னதாக கடந்த வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்துவந்தது. ஆனால் உடல்நிலை காரணமாக போட்டியிலிருந்து பவா செல்லதுரை வெளியேறிய நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் போட்டியிலும் பிரச்சினைகளிலும் பிக்பாஸ் மற்றும் ஸ்மால்பாஸ் வீடுகள் குறைவில்லாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X