BB tamil 7 show: என்னது தோத்தா சாப்பாடு கிடையாதா.. வினோதமான டாஸ்கில் போட்டியாளர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில், ஆங்கர் கமல்ஹாசன், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களை ரசிகர்களுக்கு சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 12th day and 2nd promo released

இன்றைய தினம் நிகழ்ச்சி 12வது நாளை எட்டியுள்ளது. அடுத்தடுத்த டஃப்பான டாஸ்க்குகள், பிரச்சினைகள், சவால்களுடன் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.

12வது நாளில் அடியெடுத்து வைத்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவரும் பிக்பாஸ், கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். அதிகமாக பிரபலமாகாத போட்டியாளர்களை கொண்டு, ஆனால் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

நிகழ்ச்சி இன்றைய தினம் 12ம் நாளை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுரை, உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியிலிருந்து தானே வெளியேறினார். அவரை கன்வின்ஸ் செய்ய பிக்பாஸ் எடுத்த முயற்சிகள் கைக்கொடுக்காத நிலையில், அவர் வெளியேறினார். இதையடுத்து இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. தினந்தோறும் இந்த நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் 12வது நாளின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. அதில் இரண்டாவது ப்ரமோ ரசிகர்களுக்கான சுவாரஸ்யத்தை கூட்டும்வகையில் அமைந்துள்ளது. இதில் ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் என்ற புதிய வினோதமான டாஸ்க்கை போட்டியாளர்களிடம் ரவீனா வாசித்தார். அதன்படி டாஸ்கில் தோற்றால் அவர்களுக்கு சமைக்கப்படும் சாப்பாடு கொடுக்கப்படாது என்று கூறப்படுகிறது.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 12th day and 2nd promo released

இந்த வினோதமான டாஸ்கில் பங்கேற்பவர்களில் ஒருவர் வெளியேறினாலும் மொத்த வீடும் டாஸ்கில் தோற்றதாக அர்த்தம் என்றும் கூறப்பட்ட நிலையில், இதில் யுகேந்திரன், விசித்ரா மற்றும் ரவீனா என மூவரும் பங்கேற்கின்றனர். இவர்கள் மட்டும் டாஸ்க் செய்ய அறைக்குள் சென்ற நிலையில் அங்கு பொம்மை குதிரை உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது. ஆரியமாலா பாடல் பின்புலத்தில ஒலிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த டாஸ்க்கை செய்ய முயல்கின்றனர்.

இதனிடையே, இந்த டாஸ்க்கில் இவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வியுடன் ப்ரமோ நிறைவு செய்யப்பட்டுள்ளது. விசித்ரா, யுகேந்திரன் மற்றும் ரவீனா என மூவரும் இந்த போட்டியில் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த டாஸ்கில் வெற்றி பெற்று தங்களது டீமை தோல்வியிலிருந்து காப்பாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே இந்த ப்ரமோ ஏற்படுத்தியுள்ளது. வினோதமான டாஸ்க் என்று கூறப்பட்டுள்ள நிலையில, அதையும் அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X