BB 7: தலைமைக்கும் ஒரு தகுதி வேண்டும்.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பேசும் ஆங்கர் கமல்ஹாசன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக 7வது சீசனில் நுழைந்துள்ளது.
6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனையும் சிறப்பாக துவங்கி நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 7வது ஆண்டாக ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் இன்றைய தினத்தின் முதல் ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி இன்றைய தினம் 14வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் கேப்டனாக விஜய் செயல்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் கேப்டனாக சரவணன் செயல்பட்டு வருகிறார்.
முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சினைகள் அதிகமாக காணப்பட்டது. அதையொட்டி கேப்டன்களுக்கும் அதிகமான சவால்கள் காணப்பட்டன. இந்நிலையில் தற்போது கேப்டனாக இருக்கும் சரவணனும் பல பிரச்சினைகளை, பஞ்சாயத்துக்களை சந்தித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று ஸ்ட்ரைக் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற சரவணனுக்கும் அவமதிப்புகளே ஏற்பட்டன.
இந்த ஸ்ட்ரைக் குறித்து நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசனும் பேசியதை பார்க்க முடிந்தது. நியாயத்திற்காக செய்யும் ஸ்ட்ரைக்கில் ஒரு நியாயம் வேண்டாமா என்று போட்டியாளர்களிடம் கேட்ட கமல்ஹாசன், முன்னறிவிப்பு இல்லாமல் எப்படி ஸ்ட்ரைக் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கேப்டன் குறித்தும் அவர் பேசியதை இன்றைய 14வது நாளின் முதல் ப்ரமோவில் பார்க்க முடிந்தது. போட்டியாளர்கள் சரியாகவோ தவறாகவே நடந்துக் கொள்வது ஒருபுறம் இருக்க அவர்கள் கண்டென்ட் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பதை பார்க்க முடிந்ததாக கமல் கூறியுள்ளார்.
போட்டியாளர்கள் கண்டென்ட் செய்வதை தவிர்க்கவே கேப்டன் சரவணன் தொடர்ந்து முயற்சித்ததை சுட்டிக் காட்டிய கமல்ஹாசன், இது போட்டியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தலைமைக்கு ஒரு தகுதி உள்ளதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், அதை இங்கு பேசுவதற்கு பதிலாக தலைவரிடமே கேட்டு விடுவோம் இன்றிரவு என்றும் கூறியுள்ளார். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் எந்தெந்த பஞ்சாயத்துக்களை கையிலெடுப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த சில தினங்களாக சமைக்க மாட்டோம் என ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், ஜோவிகா சக போட்டியாளர்களை போடா வாடா என்று சகட்டு மேனிக்கு பேசியதையும் பார்க்க முடிந்தது. அதேபோல, யாரும் சமைக்க வேண்டாம், நானே சமைக்கிறேன் என்று கேப்டன் சரவணன் போட்டியாளர்களிடம் கூறி மொக்கை வாங்கியதையும் பார்க்க முடிந்தது. கமல் கூறியதை போல போட்டியாளர்கள் கண்டென்டிற்காக அதிகமாக மெனக்கெட்டதையும் கடந்த வார நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இதையடுத்து இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











