Bigg Boss Tamil 7: பிரதீப் நிறைய லூஸ்டாக் விடுறாரு.. நாமினேஷன் ப்ராஸசில் இறங்கிய பிக்பாஸ் 7 டீம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கப்பட்ட நிலையில் தற்போது நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 15th day today and 2nd promo released

நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆன நிலையில் உடல் பிரச்சினையை காரணம் காட்டி அடுத்த போட்டியாளர் பவா செல்லதுரை தானாகவே வெளியேறினார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் சீசனை துவங்கியது. இந்திய அளவில் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த நிகழ்ச்சி பெற்று வருகிறது. இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 17வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருக்கும் கான்செப்டில் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியில் சில குறிப்பிட்ட போட்டியாளர்களுக்கு மட்டும் மொபைல் போன் வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் என்ன நடக்கும் என்பதை அறிந்தக் கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் 7வது சீசனை துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். கடந்த ஆண்டில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட்டாக ஒளிபரப்பானது. இதில் முதலில் ஆங்கராக இருந்த கமல்ஹாசன், இடையில் விலகிக்கொள்ள, நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக வழிநடத்தினார். இதனிடையே இன்றைய தினம் 15வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 7வது சீசனின் 2வது ப்ரமோ வெளியாகியுள்ளது.

இவர்களின் முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆன நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி எழுத்தாளர் பவா செல்லதுரையும் வெளியேறினார். இதனால் கடந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெறவில்லை. கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் அதிகமான பிரச்சினைகள், சவால்கள், சண்டைகள், விவாதங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவர்களின் பஞ்சாயத்துக்களை தொடர்ந்து 2வது வாரமாக கடந்த இரு தினங்களில் கமல்ஹாசன் தீர்த்து வைத்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் போட்டியாளர்கள் நாமினேஷன் ப்ராசசில் ஈடுபட்டனர். இதில் அதிகமாக மாயா நாமினேட் செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது. பூர்ணிமா அழகாக இருப்பதாகவும் ஆனால் அவருக்கு மூளை இல்லை என்றும் போட்டியாளர்கள் கூறியதை பார்க்க முடிந்தது. இதேபோல பிரதீப்பும் அதிகமாக நாமினேட் செய்யப்பட்டார். அவர் அதிகமாக லூஸ் டாக் விடுவதாக சொல்லப்பட்டது. விசித்ராவும் அதிகமான போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X