BB tamil 7 show: ஆக்சிஜனுக்காக அடித்துக் கொண்ட போட்டியாளர்கள்.. நிறுத்தப்பட்ட டாஸ்க்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய டாஸ்க்கில் அதிகமான போட்டி, பொறாமை, சண்டையை பார்க்க முடிந்தது.

ஆக்சிஜன் எமர்ஜென்சி என்ற பெயரில் இன்று நடத்தப்பட்ட இரு வீட்டாருக்கிடையிலான டாஸ்க்கில் மிகவும் அதிகமான போட்டி காணப்பட்டது.

விஷ்ணு -விஜய் இடையில் இந்த டாஸ்க்கையொட்டி ஏற்பட்ட போட்டியில் அடிதடி சண்டை ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 18th day and next to next promo released

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் அதிரடி சரவெடியாக துவங்கியது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி களமிறங்கிய நிலையில் அனன்யா முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர் பவா செல்லதுரையும் வெளிநடப்பு செய்தார்.

இதனால் கடந்த வாரத்தில் இந்தப் போட்டியில் எலிமினேஷன் இல்லாத நிலை காணப்பட்டது. முதல் வாரத்திலேயே கல்வி குறித்த விவாதம் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பலமாக காணப்பட்டது. ஜோவிகாவின் கல்வி இடைநிற்றல் விசித்ரா உள்ளிட்டவர்களிடம் மிகுந்த வாக்குவாதங்களை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளான ஜோவிகா, போடி, வாடி என சக போட்டியாளர்களிடம் ஒருமையில் பேசிய நிகழ்வுகளும் காணப்பட்டன.

இந்நிலையில் போட்டியில் முதல் வாரத்தை காட்டிலும் தற்போது மிகவும் கடுமையான டாஸ்க்குகளும் அதனால் போட்டியாளர்களிடையே சண்டை, சச்சரவுகளும் அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் ஆக்சிஜன் எமர்ஜென்சி என்ற இரு வீட்டாருக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன்படி எந்த வீட்டினர் அதிகமான சிலிண்டர்களை கைப்பற்றுகிறார்களோ அந்த வீட்டினரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஒரு பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை கைப்பற்ற பிக் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டினரிடையே கடுமையான போட்டி நிலவியது. சிலிண்டர்களை கைப்பற்றி ஒருவர் மீது ஒருவர் புரண்ட சம்பவங்களும் இதில் காணப்பட்டதாக ப்ரமோவில் காட்டப்பட்டது. விஷ்ணு மற்றும் விஜய் இடையிலும் அதிகமான அடிதடி சண்டைகள் காணப்பட்டன. இதையடுத்து தற்போது 2வது ப்ரமோ வெளியாகியுள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 show entered 18th day and next to next promo released

இதில் விஷ்ணு, விஜய்யிடையே சிலிண்டர்களை கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட அடிதடி சண்டையில் இருவரும் மிகவும் வலிமையாக மோதிக் கொண்டனர். இதையடுத்து, அடிச்சி மூஞ்சை உடைத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார் போலிருக்கிறது என்று விஷ்ணு சக போட்டியாளர்களிடம் புலம்புவதையும் பார்க்க முடிந்தது. தனக்கு மூஞ்சி தான் சோறு போடுகிறது என்றும் அவர் கூறினார். சிலிண்டர்களுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொண்டதையடுத்து இந்த டாஸ்க் நிறுத்தப்பட்டதாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X